Corpus pasurams 1698–1707

This page preserves the source-defined decade 8, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 751 · corpus 1698

Pasuram 751

Study resources at Uveda
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் * துளங்கா அரக்கர் துளங்க * முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் * சிறிதே முனிந்த திருமார்வன் **
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை * வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் * கண்டுகொண்டு உகந்த * கண்ணபுரம் நாம் தொழுதுமே 1

Pasuram 752 · corpus 1699

Pasuram 752

Study resources at Uveda
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் * பொன்ற அன்று புள் ஊர்ந்து *
பெருந் தோள் மாலி தலை புரளப் * பேர்ந்த அரக்கர் தென் இலங்கை **
இருந்தார் தம்மை உடன்கொண்டு * அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப *
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 2

Pasuram 753 · corpus 1700

Pasuram 753

Study resources at Uveda
வல்லி இடையாள் பொருட்டாக * மதிள் நீர் இலங்கையார் கோவை *
அல்லல் செய்து வெம் சமத்துள் * ஆற்றல் மிகுத்த ஆற்றலான் **
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட * முனி தன் வேள்வியை *
கல்விச் சிலையால் காத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 3

Pasuram 754 · corpus 1701

Pasuram 754

Study resources at Uveda
மல்லை முந்நீர் அதர்பட * வரி வெம் சிலை கால் வளைவித்து *
கொல்லை விலங்கு பணிசெய்ய * கொடியோன் இலங்கை புகல் உற்று **
தொல்லை மரங்கள் புகப் பெய்து * துவலை நிமிர்ந்து வான் அணவ *
கல்லால் கடலை அடைத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 4

Pasuram 755 · corpus 1702

Pasuram 755

Study resources at Uveda
ஆமை ஆகி அரி ஆகி * அன்னம் ஆகி * அந்தணர் தம்

ஓமம் ஆகி ஊழி ஆகி * உவரி சூழ்ந்த நெடும் புணரி **

சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் * சிரமும் கரமும் துணித்து * முன்

காமன் பயந்தான் கருதும் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 5

Pasuram 756 · corpus 1703

Pasuram 756

Study resources at Uveda
வருந்தாது இரு நீ மட நெஞ்சே * நம் மேல் வினைகள் வாரா * முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை * செந் தீ உண்ண சிவந்து ஒருநாள் **
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து * பின்னை மணாளன் ஆகி * முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 6

Pasuram 757 · corpus 1704

Pasuram 757

Study resources at Uveda
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் * முதலை தன்னால் அடர்ப்புண்டு *
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய * அதனுக்கு அருள்புரிந்தான் **
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு * இளையோற்கு அரசை அருளி * முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 7

Pasuram 758 · corpus 1705

Pasuram 758

Study resources at Uveda
மால் ஆய் மனமே அருந் துயரில் * வருந்தாது இரு நீ வலி மிக்க *
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் * கத மாக் கழுதையும் **
மால் ஆர் விடையும் மத கரியும் * மல்லர் உயிரும் மடிவித்து *
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 8

Pasuram 759 · corpus 1706

Pasuram 759

Study resources at Uveda
குன்றால் மாரி பழுது ஆக்கி * கொடி ஏர் இடையாள் பொருட்டாக *
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த * வானோர் பெருமான் மா மாயன் **
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த் * திரி கால் சகடம் சினம் அழித்து *
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 9

Pasuram 760 · corpus 1707

Pasuram 760

Study resources at Uveda
கரு மா முகில் தோய் நெடு மாடக் * கண்ணபுரத்து எம் அடிகளை *
திரு மா மகளால் அருள்மாரி * செழுநீர் ஆலி வள நாடன் **
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி * மங்கை வேந்தன் ஒலி வல்லார் *
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி * இமையோர் இறைஞ்ச வாழ்வாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.