Pasuram 761 · corpus 1708
Pasuram 761
வியம் உடை விடை இனம் * உடைதர மட மகள் *
குயம் மிடை தட வரை * அகலம் அது உடையவர் **
நயம் உடை நடை அனம் * இளையவர் நடை பயில் *
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே 1
Thirumangai Azhwar · Pasurams 761–770
Corpus pasurams 1708–1717
This page preserves the source-defined decade 8, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 761 · corpus 1708
வியம் உடை விடை இனம் * உடைதர மட மகள் *
குயம் மிடை தட வரை * அகலம் அது உடையவர் **
நயம் உடை நடை அனம் * இளையவர் நடை பயில் *
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே 1
Pasuram 762 · corpus 1709
இணை மலி மருதினொடு * எருதிற இகல் செய்து *
துணை மலி முலையவள் * மணம் மிகு கலவியுள் **
மணம் மலி விழவினொடு * அடியவர் அளவிய *
கணம் மலி கணபுரம் * அடிகள் தம் இடமே 2
Pasuram 763 · corpus 1710
புயல் உறு வரை மழை * பொழிதர மணி நிரை *
மயல் உற வரை குடை * எடுவிய நெடியவர் **
முயல் துளர் மிளை முயல் துள * வள விளை வயல் *
கயல் துளு கணபுரம் * அடிகள் தம் இடமே 3
Pasuram 764 · corpus 1711
ஏதலர் நகைசெய * இளையவர் அளை வெணெய் *
போது செய்து அமரிய * புனிதர் நல் விரை ** மலர்
கோதிய மதுகரம் * குலவிய மலர் மகள் *
காதல்செய் கணபுரம் * அடிகள் தம் இடமே 4
Pasuram 765 · corpus 1712
தொண்டரும் அமரரும் * முனிவரும் தொழுது எழ *
அண்டமொடு அகல் இடம் * அளந்தவர் அமர்செய்து **
விண்டவர் பட * மதிள் இலங்கை முன் எரி எழ *
கண்டவர் கணபுரம் * அடிகள் தம் இடமே 5
Pasuram 766 · corpus 1713
மழுவு இயல் படை * உடையவன் இடம் மழை முகில் *
தழுவிய உருவினர் * திருமகள் மருவிய **
கொழுவிய செழு மலர் * முழுசிய பறவை பண் *
எழுவிய கணபுரம் * அடிகள் தம் இடமே 6
Pasuram 767 · corpus 1714
பரிதியொடு அணி மதி * பனி வரை திசை நிலம் *
எரி தியொடு என இன * இயல்வினர் செலவினர் **
சுருதியொடு அரு மறை * முறை சொலும் அடியவர் *
கருதிய கணபுரம் * அடிகள் தம் இடமே 7
Pasuram 768 · corpus 1715
படி புல்கும் அடி இணை * பலர் தொழ மலர் வைகு *
கொடி புல்கு தட வரை * அகலம் அது உடையவர் **
முடி புல்கு நெடு வயல் * படை செல அடி மலர் *
கடி புல்கு கணபுரம் * அடிகள் தம் இடமே 8
Pasuram 769 · corpus 1716
புல மனும் மலர்மிசை * மலர் மகள் புணரிய *
நிலமகள் என இன * மகளிர்கள் இவரொடும் **
வல மனு படையுடை * மணி வணர் நிதி குவை *
கல மனு கணபுரம் * அடிகள் தம் இடமே 9
Pasuram 770 · corpus 1717
மலி புகழ் கணபுரம் உடைய * எம் அடிகளை *
வலி கெழு மதிள் அயல் * வயல் அணி மங்கையர் **
கலியன தமிழ் இவை * விழுமிய இசையினொடு *
ஒலி சொலும் அடியவர் * உறு துயர் இலரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.