This page preserves the source-defined decade 8, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வானோர் அளவும் முது முந்நீர் * வளர்ந்த காலம் * வலி உருவின்
மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட * தண் தாமரைக் கண்ணன் **
ஆனா உருவில் ஆன் ஆயன் * அவனை அம் மா விளை வயலுள் *
கான் ஆர் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டுகொண்டேனே 1
பார் ஆர் அளவும் முது முந்நீர் * பரந்த காலம் * வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் * எடுத்த ஆற்றல் அம்மானை **
கூர் ஆர் ஆரல் இரை கருதிக் * குருகு பாயக் கயல் இரியும் *
கார் ஆர் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டுகொண்டேனே 3
வடிவாய் மழுவே படை ஆக * வந்து தோன்றி மூவெழுகால் *
படி ஆர் அரசு களைகட்ட * பாழியானை அம்மானை **
குடியா வண்டு கொண்டு உண்ணக் * கோல நீலம் மட்டு உகுக்கும் *
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து * அடியேன் கண்டுகொண்டேனே 6
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் * முன்னும் இராமன் ஆய்த்
தான் ஆய் * பின்னும் இராமன் ஆய்த் தாமோதரன் ஆய்க் ** கற்கியும்
ஆனான் தன்னை * கண்ணபுரத்து அடியேன் * கலியன் ஒலிசெய்த *
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை * செப்ப பாவம் நில்லாவே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.