Pasuram 881 · corpus 1828
Pasuram 881
மூவரில் முன் முதல்வன் * முழங்கு ஆர் கடலுள் கிடந்து *
பூ வளர் உந்தி தன்னுள் * புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த **
தேவர்கள் நாயகனைத் * திருமாலிருஞ்சோலை நின்ற *
கோவலர் கோவிந்தனைக் * கொடி ஏர் இடை கூடும்கொலோ? 1
Thirumangai Azhwar · Pasurams 881–890
Corpus pasurams 1828–1837
This page preserves the source-defined decade 9, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 881 · corpus 1828
மூவரில் முன் முதல்வன் * முழங்கு ஆர் கடலுள் கிடந்து *
பூ வளர் உந்தி தன்னுள் * புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த **
தேவர்கள் நாயகனைத் * திருமாலிருஞ்சோலை நின்ற *
கோவலர் கோவிந்தனைக் * கொடி ஏர் இடை கூடும்கொலோ? 1
Pasuram 882 · corpus 1829
புனை வளர் பூம் பொழில் ஆர் * பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை * மூவுலகும் படைத்த * முதல் மூர்த்தி தன்னை **
சினை வளர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்றான் *
கனை கழல் காணும்கொலோ * கயல் கண்ணி எம் காரிகையே? 2
Pasuram 883 · corpus 1830
உண்டு உலகு ஏழினையும் * ஒரு பாலகன் ஆல் இலைமேல் *
கண்துயில் கொண்டு உகந்த * கரு மாணிக்க மா மலையை **
திண் திறல் மா கரி சேர் * திருமாலிருஞ்சோலை நின்ற *
அண்டர் தம் கோவினை இன்று * அணுகும்கொல் என் ஆய் இழையே? 3
Pasuram 884 · corpus 1831
சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த *
பங்கய மா மலர்க் கண் * பரனை எம் பரம் சுடரை **
திங்கள் நல் மா முகில் சேர் * திருமாலிருஞ்சோலை நின்ற *
நங்கள் பிரானை இன்று * நணுகும்கொல் என் நல் நுதலே? 4
Pasuram 885 · corpus 1832
தானவன் வேள்வி தன்னில் * தனியே குறள் ஆய் நிமிர்ந்து *
வானமும் மண்ணகமும் * அளந்த திரிவிக்கிரமன் **
தேன் அமர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
வானவர் கோனை இன்று * வணங்கித் தொழ வல்லள்கொலோ? 5
Pasuram 886 · corpus 1833
நேசம் இலாதவர்க்கும் * நினையாதவர்க்கும் அரியான் *
வாச மலர்ப் பொழில் சூழ் * வட மா மதுரைப் பிறந்தான் **
தேசம் எல்லாம் வணங்கும் * திருமாலிருஞ்சோலை நின்ற *
கேசவ நம்பி தன்னைக் * கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ? 6
Pasuram 887 · corpus 1834
புள்ளினை வாய் பிளந்து * பொரு மா கரி கொம்பு ஒசித்து *
கள்ளச் சகடு உதைத்த * கரு மாணிக்க மா மலையை **
தெள் அருவி கொழிக்கும் * திருமாலிருஞ்சோலை நின்ற *
வள்ளலை வாள் நுதலாள் * வணங்கித் தொழ வல்லள்கொலோ? 7
Pasuram 888 · corpus 1835
பார்த்தனுக்கு அன்று அருளிப் * பாரதத்து ஒரு தேர் முன் நின்று *
காத்தவன் தன்னை * விண்ணோர் கரு மாணிக்க மா மலையை **
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
மூர்த்தியைக் கைதொழவும் * முடியும் கொல் என் மொய் குழற்கே? 8
Pasuram 889 · corpus 1836
வலம்புரி ஆழியனை * வரை ஆர் திரள் தோளன் தன்னை *
புலம் புரி நூலவனைப் * பொழில் வேங்கட வேதியனை **
சிலம்பு இயல் ஆறு உடைய * திருமாலிருஞ்சோலை நின்ற *
நலம் திகழ் நாரணனை * நணுகும் கொல் என் நல் நுதலே? 9
Pasuram 890 · corpus 1837
தேடற்கு அரியவனைத் * திருமாலிருஞ்சோலை நின்ற *
ஆடல் பறவையனை * அணி ஆய் இழை காணும் என்று **
மாடக் கொடி மதிள் சூழ் * மங்கையார் கலிகன்றி சொன்ன *
பாடல் பனுவல் பத்தும் * பயில்வார்க்கு இல்லை பாவங்களே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.