Pasuram 851 · corpus 1798
Pasuram 851
அக்கும் புலியின் * அதளும் உடையார் * அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற * பண்பர் ஊர்போலும் **
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி * தாய் வாயில்
கொக்கின் பிள்ளை * வெள் இறா உண்ணும் குறுங்குடியே 1
Thirumangai Azhwar · Pasurams 851–860
Corpus pasurams 1798–1807
This page preserves the source-defined decade 9, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 851 · corpus 1798
அக்கும் புலியின் * அதளும் உடையார் * அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற * பண்பர் ஊர்போலும் **
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி * தாய் வாயில்
கொக்கின் பிள்ளை * வெள் இறா உண்ணும் குறுங்குடியே 1
Pasuram 852 · corpus 1799
துங்க ஆர் அரவத் * திரை வந்து உலவ * தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் * புனிதர் ஊர்போலும் **
செங் கால் அன்னம் * திகழ் தண் பணையில் பெடையோடும் *
கொங்கு ஆர் கமலத்து * அலரில் சேரும் குறுங்குடியே 2
Pasuram 853 · corpus 1800
வாழக் கண்டோம் * வந்து காண்மின் தொண்டீர்காள்! *
கேழல் செங்கண் * மா முகில் வண்ணர் மருவும் ஊர் **
ஏழைச் செங்கால் * இன் துணை நாரைக்கு இரை தேடி *
கூழைப் பார்வைக் * கார் வயல் மேயும் குறுங்குடியே 3
Pasuram 854 · corpus 1801
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் * சிந்தச் சென்று * அரக்கன்
உரமும் கரமும் துணித்த * உரவோன் ஊர்போலும் **
இரவும் பகலும் * ஈன் தேன் முரல * மன்று எல்லாம்
குரவின் பூவே தான் * மணம் நாறும் குறுங்குடியே 4
Pasuram 855 · corpus 1802
கவ்வைக் களிற்று மன்னர் மாள * கலி மான் தேர்
ஐவர்க்கு ஆய் * அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும் **
மை வைத்து இலங்கு * கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் *
கொவ்வைக் கனி வாய்க் * கிள்ளை பேசும் குறுங்குடியே 5
Pasuram 856 · corpus 1803
தீ நீர் வண்ண * மா மலர் கொண்டு விரை ஏந்தி *
தூ நீர் பரவித் * தொழுமின் எழுமின் தொண்டீர்காள்! **
மா நீர் வண்ணர் * மருவி உறையும் இடம் * வானில்
கூன் நீர் மதியை * மாடம் தீண்டும் குறுங்குடியே 6
Pasuram 857 · corpus 1804
வல்லிச் சிறு நுண் இடையாரிடை * நீர் வைக்கின்ற *
அல்லல் சிந்தை தவிர * அடைமின் அடியீர்காள்! **
சொல்லில் திருவே அனையார் * கனி வாய் எயிறு ஒப்பான் *
கொல்லை முல்லை * மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
Pasuram 858 · corpus 1805
நார் ஆர் இண்டை * நாள் மலர் கொண்டு நம் தமர்காள் *
ஆரா அன்போடு * எம்பெருமான் ஊர அடைமின்கள் **
தாரா ஆரும் * வார் புனல் மேய்ந்து வயல் வாழும் *
கூர் வாய் நாரை * பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
Pasuram 859 · corpus 1806
நின்ற வினையும் துயரும் கெட * மா மலர் ஏந்தி *
சென்று பணிமின் எழுமின் தொழுமின் * தொண்டீர்காள் **
என்றும் இரவும் பகலும் * வரி வண்டு இசை பாட *
குன்றின் முல்லை * மன்றிடை நாறும் குறுங்குடியே 9
Pasuram 860 · corpus 1807
சிலையால் இலங்கை செற்றான் * மற்று ஓர் சின வேழம் *
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய * குறுங்குடிமேல் **
கலை ஆர் பனுவல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
நிலை ஆர் பாடல் பாடப் * பாவம் நில்லாவே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.