Corpus pasurams 1808–1817

This page preserves the source-defined decade 9, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 861 · corpus 1808

Pasuram 861

Study resources at Uveda
தந்தை தாய் மக்களே * சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற *
பந்தம் ஆர் வாழ்க்கையை * நொந்து நீ பழி எனக் கருதினாயேல் **
அந்தம் ஆய் ஆதி ஆய் * ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய *
மைந்தனார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 1

Pasuram 862 · corpus 1809

Pasuram 862

Study resources at Uveda
மின்னும் ஆ வல்லியும் வஞ்சியும் வென்ற * நுண் இடை நுடங்கும் *
அன்ன மென் நடையினார் கலவியை * அருவருத்து அஞ்சினாயேல் **
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி * முன் தூது சென்ற *
மன்னனார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 2

Pasuram 863 · corpus 1810

Pasuram 863

Study resources at Uveda
பூண் உலாம் மென் முலைப் பாவைமார் * பொய்யினை மெய் இது என்று *
பேணுவார் பேசும் அப் பேச்சை * நீ பிழை எனக் கருதினாயேல் **
நீள் நிலா வெண் குடை வாணனார் * வேள்வியில் மண் இரந்த *
மாணியார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3

Pasuram 864 · corpus 1811

Pasuram 864

Study resources at Uveda
பண் உலாம் மென் மொழிப் பாவைமார் * பணை முலை அணைதும் நாம் என்று *
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து * நீ பிழைத்து உயக் கருதினாயேல் **
விண் உளார் விண்ணின் மீது இயன்ற * வேங்கடத்து உளார் * வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 4

Pasuram 865 · corpus 1812

Pasuram 865

Study resources at Uveda
மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் * வாரணம் சூழ வாழ்ந்தார் *
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை * நீ துயர் எனக் கருதினாயேல் **
நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து * அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 5

Pasuram 866 · corpus 1813

Pasuram 866

Study resources at Uveda
உருவின் ஆர் பிறவி சேர் * ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு *
அருவி நோய் செய்து நின்று * ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் **
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து * தீ வேள்வியோடு அங்கம் ஆறும் *
மருவினார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 6

Pasuram 867 · corpus 1814

Pasuram 867

Study resources at Uveda
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை * மெய் எனக் கொண்டு * வாளா
பேயர் தாம் பேசும் அப் பேச்சை * நீ பிழை எனக் கருதினாயேல் **
தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் * மங்குல் வான் ஆகி நின்ற *
மாயனார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 7

Pasuram 868 · corpus 1815

Pasuram 868

Study resources at Uveda
மஞ்சு சேர் வான் எரி * நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற *
அஞ்சு சேர் ஆக்கையை * அரணம் அன்று என்று உயக் கருதினாயேல் **
சந்து சேர் மென் முலைப் * பொன் மலர்ப் பாவையும் தாமும் * நாளும்
வந்து சேர் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 8

Pasuram 869 · corpus 1816

Pasuram 869

Study resources at Uveda
வெள்ளியார் பிண்டியார் போதியார் * என்று இவர் ஓதுகின்ற *
கள்ளநூல் தன்னையும் * கருமம் அன்று என்று உயக் கருதினாயேல் **
தெள்ளியார் கைதொழும் தேவனார் * மா முநீர் அமுது தந்த *
வள்ளலார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 9

Pasuram 870 · corpus 1817

Pasuram 870

Study resources at Uveda
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் * வல்லவாழ் அடிகள் தம்மை *
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் * கோல நீள் ஆலி நாடன் **
கறை உலாம் வேல்வல்ல * கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார் *
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு * இன்பம் நன்கு எய்துவாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.