Corpus pasurams 1818–1827

This page preserves the source-defined decade 9, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 871 · corpus 1818

Pasuram 871

Study resources at Uveda
முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார் *
கலவியை விடு தடுமாறல் *
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
ஆய * எம் அடிகள் தம் கோயில் **
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் *
தழுவி வந்து அருவிகள் நிரந்து *
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 1

Pasuram 872 · corpus 1819

Pasuram 872

Study resources at Uveda
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி *
எழுமினோ தொழுதும் என்று * இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற *
சுடர் முடிக் கடவுள் தம் கோயில் **
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் *
விரை மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 2

Pasuram 873 · corpus 1820

Pasuram 873

Study resources at Uveda
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப் *
பெரு நிலம் அருளின் முன் அருளி *
அணி வளர் குறள் ஆய் அகல் இடம் முழுதும் *
அளந்த எம் அடிகள் தம் கோயில் **
கணி வளர் வேங்கை நெடு நிலம் அதனில் *
குறவர் தம் கவணிடைத் துரந்த *
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 3

Pasuram 874 · corpus 1821

Pasuram 874

Study resources at Uveda
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்துச் *
சுடு சரம் அடு சிலைத் துரந்து *
நீர்மை இலாத தாடகை மாள *
நினைந்தவர் மனம் கொண்ட கோயில் **
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் *
கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 4

Pasuram 875 · corpus 1822

Pasuram 875

Study resources at Uveda
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய *
மணி முடி ஒருபதும் புரள *
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட *
அமர்செய்த அடிகள் தம் கோயில் **
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் *
பிரசம் வந்து இழிதர பெருந் தேன் *
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 5

Pasuram 876 · corpus 1823

Pasuram 876

Study resources at Uveda
விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று *
விளங்கனிக்கு இளங் கன்று விசிறி *
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த *
கூத்த எம் அடிகள் தம் கோயில் **
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் *
தடவரைக் களிறு என்று முனிந்து *
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 6

Pasuram 877 · corpus 1824

Pasuram 877

Study resources at Uveda
தேனுகன் ஆவி போய் உக * அங்கு ஓர்
செழுந் திரள் பனங்கனி உதிர *
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர் *
எண்ணி முன் இடம் கொண்ட கோயில் **
வானகச் சோலை மரதகச் சாயல் *
மா மணிக் கல் அதர் நுழைந்து *
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 7

Pasuram 878 · corpus 1825

Pasuram 878

Study resources at Uveda
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவப் *
பொரு கடல் அரவணைத் துயின்று *
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த *
பனி முகில் வண்ணர் தம் கோயில் **
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின் *
கவுள் வழிக் களி வண்டு பருக *
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 8

Pasuram 879 · corpus 1826

Pasuram 879

Study resources at Uveda
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் *
ஒத்தன பேசவும் உகந்திட்டு *
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் *
எண்ணி முன் இடம் கொண்ட கோயில் ***
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும் *
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 9

Pasuram 880 · corpus 1827

Pasuram 880

Study resources at Uveda
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
மா மணி வண்ணரை வணங்கும் *
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல் *
சூழ் வயல் ஆலி நல் நாடன் **
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் *
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் *
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
ஆள்வர் இக் குரை கடல் உலகே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.