Pasuram 32 · corpus 44
Pasuram 32
மாணிக்கம் கட்டி * வயிரம் இடை கட்டி *
ஆணிப் பொன்னால் செய்த * வண்ணச் சிறுத்தொட்டில் **
பேணி உனக்குப் * பிரமன் விடுதந்தான் *
மாணிக் குறளனே தாலேலோ *
வையம் அளந்தானே தாலேலோ (1)
Periyalvar · Pasurams 32–41
Corpus pasurams 44–53
This page preserves the source-defined decade 1, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 32 · corpus 44
மாணிக்கம் கட்டி * வயிரம் இடை கட்டி *
ஆணிப் பொன்னால் செய்த * வண்ணச் சிறுத்தொட்டில் **
பேணி உனக்குப் * பிரமன் விடுதந்தான் *
மாணிக் குறளனே தாலேலோ *
வையம் அளந்தானே தாலேலோ (1)
Pasuram 33 · corpus 45
உடையார் கனமணியோடு * ஒண் மாதுளம்பூ *
இடை விரவிக் கோத்த * எழில் தெழ்கினோடும் **
விடை ஏறு காபாலி * ஈசன் விடுதந்தான் *
உடையாய் அழேல் அழேல் தாலேலோ *
உலகம் அளந்தானே தாலேலோ (2)
Pasuram 34 · corpus 46
என் தம்பிரானார் * எழில் திருமார்வர்க்கு *
சந்தம் அழகிய * தாமரைத் தாளர்க்கு **
இந்திரன் தானும் * எழில் உடைக் கிண்கிணி *
தந்து உவனாய் நின்றான் தாலேலோ *
தாமரைக் கண்ணனே தாலேலோ (3)
Pasuram 35 · corpus 47
சங்கின் வலம்புரியும் * சேவடிக் கிண்கிணியும் *
அங்கைச் சரிவளையும் * நாணும் அரைத்தொடரும் **
அங்கண் விசும்பில் * அமரர்கள் போத்தந்தார் *
செங்கண் கருமுகிலே தாலேலோ *
தேவகி சிங்கமே தாலேலோ (4)
Pasuram 36 · corpus 48
எழில் ஆர் திருமார்வுக்கு * ஏற்கும் இவை என்று *
அழகிய ஐம்படையும் * ஆரமும் கொண்டு **
வழு இல் கொடையான் * வயிச்சிராவணன் *
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ *
தூமணி வண்ணனே தாலேலோ (5)
Pasuram 37 · corpus 49
ஓதக் கடலின் * ஒளிமுத்தின் ஆரமும் *
சாதிப் பவளமும் * சந்தச் சரிவளையும் **
மா தக்க என்று * வருணன் விடுதந்தான் *
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ *
சுந்தரத் தோளனே தாலேலோ (6)
Pasuram 38 · corpus 50
கான் ஆர் நறுந்துழாய் * கைசெய்த கண்ணியும் *
வான் ஆர் செழுஞ்சோலைக் * கற்பகத்தின் வாசிகையும் **
தேன் ஆர் மலர்மேல் * திருமங்கை போத்தந்தாள் *
கோனே அழேல் அழேல் தாலேலோ *
குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)
Pasuram 39 · corpus 51
கச்சொடு பொற்சுரிகை * காம்பு கனகவளை *
உச்சி மணிச்சுட்டி * ஒண்தாள் நிரைப் பொற்பூ **
அச்சுதனுக்கு என்று * அவனியாள் போத்தந்தாள் *
நச்சுமுலை உண்டாய் தாலேலோ *
நாராயணா அழேல் தாலேலோ (8)
Pasuram 40 · corpus 52
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் *
செய்ய தடங்கண்ணுக்கு * அஞ்சனமும் சிந்துரமும் **
வெய்ய கலைப்பாகி * கொண்டு உவளாய் நின்றாள் *
ஐயா அழேல் அழேல் தாலேலோ *
அரங்கத்து அணையானே தாலேலோ (9)
Pasuram 41 · corpus 53
வஞ்சனையால் வந்த * பேய்ச்சி முலை உண்ட *
அஞ்சன வண்ணனை * ஆய்ச்சி தாலாட்டிய **
செஞ்சொல் மறையவர் சேர் * புதுவைப் பட்டன் சொல் *
எஞ்சாமை வல்லவர்க்கு * இல்லை இடர்தானே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.