Pasuram 42 · corpus 54
Pasuram 42
தன்முகத்துச் சுட்டி * தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப் *
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் * புழுதி அளைகின்றான் **
என்மகன் கோவிந்தன் * கூத்தினை இள மா மதீ *
நின்முகம் கண்ணுள ஆகில் * நீ இங்கே நோக்கிப் போ (1)
Periyalvar · Pasurams 42–51
Corpus pasurams 54–63
This page preserves the source-defined decade 1, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 42 · corpus 54
தன்முகத்துச் சுட்டி * தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப் *
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் * புழுதி அளைகின்றான் **
என்மகன் கோவிந்தன் * கூத்தினை இள மா மதீ *
நின்முகம் கண்ணுள ஆகில் * நீ இங்கே நோக்கிப் போ (1)
Pasuram 43 · corpus 55
என் சிறுக்குட்டன் * எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான் *
தன் சிறுக்கைகளால் * காட்டிக் காட்டி அழைக்கின்றான் **
அஞ்சன வண்ணனோடு * ஆடல் ஆட உறுதியேல் *
மஞ்சில் மறையாதே * மா மதீ மகிழ்ந்து ஓடி வா (2)
Pasuram 44 · corpus 56
சுற்றும் ஒளிவட்டம் * சூழ்ந்து சோதி பரந்து எங்கும் *
எத்தனை செய்யிலும் * என்மகன் முகம் நேரொவ்வாய் **
வித்தகன் வேங்கட வாணன் * உன்னை விளிக்கின்ற *
கைத்தலம் நோவாமே * அம்புலீ கடிது ஓடி வா (3)
Pasuram 45 · corpus 57
சக்கரக் கையன் * தடங்கண்ணால் மலர விழித்து *
ஒக்கலைமேல் இருந்து * உன்னையே சுட்டிக் காட்டும் காண் **
தக்கது அறிதியேல் * சந்திரா சலம் செய்யாதே *
மக்கட் பெறாத * மலடன் அல்லையேல் வா கண்டாய் (4)
Pasuram 46 · corpus 58
அழகிய வாயில் * அமுத ஊறல் தெளிவுறா *
மழலை முற்றாத * இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் **
குழகன் சிரீதரன் * கூவக் கூவ நீ போதியேல் *
புழையில ஆகாதே * நின்செவி புகர் மா மதீ (5)
Pasuram 47 · corpus 59
தண்டொடு சக்கரம் * சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் *
கண் துயில்கொள்ளக் கருதிக் * கொட்டாவி கொள்கின்றான் **
உண்ட முலைப்பால் அறா கண்டாய் * உறங்காவிடில் *
விண்தனில் மன்னிய * மா மதீ விரைந்து ஓடி வா (6)
Pasuram 48 · corpus 60
பாலகன் என்று * பரிபவம் செய்யேல் * பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த * சிறுக்கன் அவன் இவன் **
மேல் எழப் பாய்ந்து * பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் *
மாலை மதியாதே * மா மதீ மகிழ்ந்து ஓடி வா (7)
Pasuram 49 · corpus 61
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை * இகழேல் கண்டாய் *
சிறுமையின் வார்த்தையை * மாவலியிடைச் சென்று கேள் **
சிறுமைப் பிழை கொள்ளில் * நீயும் உன் தேவைக்கு உரியை காண் *
நிறைமதீ நெடுமால் * விரைந்து உன்னைக் கூவுகின்றான் (8)
Pasuram 50 · corpus 62
தாழியில் வெண்ணெய் * தடங்கை ஆர விழுங்கிய *
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் * உன்னைக் கூவுகின்றான் **
ஆழிகொண்டு உன்னை எறியும் * ஐயுறவு இல்லை காண் *
வாழ உறுதியேல் * மா மதீ மகிழ்ந்து ஓடி வா (9)
Pasuram 51 · corpus 63
மைத்தடங் கண்ணி * யசோதை தன்மகனுக்கு * இவை
ஒத்தன சொல்லி * உரைத்த மாற்றம் ** ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் * விரித்த தமிழ் இவை *
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு * இடர் இல்லையே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.