This page preserves the source-defined decade 1, chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால் *
தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய *
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழ் அவிய *
நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே **
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் *
தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய * என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை *
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (7)
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி *
உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் *
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர *
கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி **
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் *
மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை *
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8)
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் *
ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை *
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று **
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு *
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் *
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் *
உலகில் எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.