Corpus pasurams 75–85

This page preserves the source-defined decade 1, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 63 · corpus 75

Pasuram 63

Study resources at Uveda
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப * மருங்கின் மேல் *
 ஆணிப் பொன்னால் செய்த * ஆய்பொன் உடை மணி
 பேணி ** பவளவாய் முத்துஇலங்க * பண்டு
 காணி கொண்ட கைகளால் சப்பாணி *
 கருங்குழல் குட்டனே சப்பாணி (1)

Pasuram 64 · corpus 76

Pasuram 64

Study resources at Uveda
பொன் அரைநாணொடு * மாணிக்கக் கிண்கிணி *
 தன் அரை ஆட * தனிச் சுட்டி தாழ்ந்து ஆட **
 என் அரை மேல்நின்று இழிந்து * உங்கள் ஆயர்தம் *
 மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி *
 மாயவனே கொட்டாய் சப்பாணி (2)

Pasuram 65 · corpus 77

Pasuram 65

Study resources at Uveda
பன் மணி முத்து * இன்பவளம் பதித்தன்ன *
 என் மணிவண்ணன் * இலங்கு பொன் தோட்டின் மேல் **
 நின் மணிவாய் முத்து இலங்க * நின் அம்மைதன் *
 அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி *
 ஆழியங் கையனே சப்பாணி (3)

Pasuram 66 · corpus 78

Pasuram 66

Study resources at Uveda
தூ நிலாமுற்றத்தே * போந்து விளையாட *
 வான் நிலா அம்புலீ * சந்திரா வா என்று **
 நீ நிலா நின் புகழா நின்ற * ஆயர்தம் *
 கோ நிலாவ கொட்டாய் சப்பாணி *
 குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4)

Pasuram 67 · corpus 79

Pasuram 67

Study resources at Uveda
புட்டியில் சேறும் * புழுதியும் கொண்டுவந்து *
 அட்டி அமுக்கி * அகம் புக்கு அறியாமே **
 சட்டித் தயிரும் * தடாவினில் வெண்ணெயும் உண் *
 பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி *
 பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5)

Pasuram 68 · corpus 80

Pasuram 68

Study resources at Uveda
தாரித்து நூற்றுவர் * தந்தை சொல் கொள்ளாது *
 போர் உய்த்து வந்து * புகுந்தவர் மண் ஆளப் **
 பாரித்த மன்னர் படப் * பஞ்சவர்க்கு * அன்று
 தேர் உய்த்த கைகளால் சப்பாணி *
 தேவகி சிங்கமே சப்பாணி (6)

Pasuram 69 · corpus 81

Pasuram 69

Study resources at Uveda
பரந்திட்டு நின்ற * படுகடல் தன்னை *
 இரந்திட்ட கைம்மேல் * எறிதிரை மோத **
 கரந்திட்டு நின்ற * கடலைக் கலங்க *
 சரந் தொட்ட கைகளால் சப்பாணி *
 சார்ங்க விற்கையனே சப்பாணி (7)

Pasuram 70 · corpus 82

Pasuram 70

Study resources at Uveda
குரக்கு இனத்தாலே * குரைகடல் தன்னை *
 நெருக்கி அணை கட்டி * நீள் நீர் இலங்கை **
 அரக்கர் அவிய * அடு கணையாலே *
 நெருக்கிய கைகளால் சப்பாணி *
 நேமியங் கையனே சப்பாணி (8)

Pasuram 71 · corpus 83

Pasuram 71

Study resources at Uveda
அளந்து இட்ட தூணை * அவன் தட்ட * ஆங்கே
 வளர்ந்திட்டு * வாள் உகிர்ச் சிங்க உருவாய் **
 உளன் தொட்டு இரணியன் * ஒண்மார்வு அகலம் *
 பிளந்திட்ட கைகளால் சப்பாணி *
 பேய் முலை உண்டானே சப்பாணி (9)

Pasuram 72 · corpus 84

Pasuram 72

Study resources at Uveda
அடைந்திட்டு அமரர்கள் * ஆழ்கடல் தன்னை *
 மிடைந்திட்டு மந்தரம் * மத்தாக நாட்டி **
 வடம் சுற்றி * வாசுகி வன்கயிறு ஆக *
 கடைந்திட்ட கைகளால் சப்பாணி *
 கார்முகில் வண்ணனே சப்பாணி (10)

Pasuram 73 · corpus 85

Pasuram 73

Study resources at Uveda
ஆட்கொள்ளத் தோன்றிய * ஆயர்தம் கோவினை *
 நாட்கமழ் பூம்பொழில் * வில்லிபுத்தூர்ப் பட்டன் **
 வேட்கையால் சொன்ன * சப்பாணி ஈரைந்தும் *
 வேட்கையினால் சொல்லுவார் * வினை போமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.