This page preserves the source-defined decade 1, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் * கணகண சிரித்து உவந்து *
முன் வந்து நின்று முத்தம் தரும் * என் முகில்வண்ணன் திருமார்வன் **
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து * என்னைத் தளிர்ப்பிக்கின்றான் *
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே * தளர்நடை நடவானோ (4)
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் * மொடுமொடு விரைந்து ஓட *
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் * பெயர்ந்து அடியிடுவது போல் **
பன்னி உலகம் பரவி ஓவாப் * புகழ்ப் பலதேவன் என்னும் *
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான் * தளர்நடை நடவானோ (5)
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் * உள்ளடி பொறித்து அமைந்த *
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல் * இலச்சினை பட நடந்து **
பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின்மேல் * பின்னையும் பெய்து பெய்து *
கரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை * தளர்நடை நடவானோ (6)
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் * வேழத்தின் கருங்கன்று போல் *
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் * சிறு புகர்பட வியர்த்து **
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து * ஒன்றும் நோவாமே *
தண் போது கொண்ட தவிசின் மீதே * தளர்நடை நடவானோ (9)
திரை நீர்ச் சந்திர மண்டலம் போல * செங்கண்மால் கேசவன் * தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி * திகழ்ந்து எங்கும் புடைபெயர **
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் * பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் * சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் * தளர்நடை நடவானோ (10)