Corpus pasurams 97–107

This page preserves the source-defined decade 1, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 85 · corpus 97

Pasuram 85

Study resources at Uveda
பொன் இயல் கிண்கிணி * சுட்டி புறங் கட்டி *
 தன் இயல் ஓசை * சலன் சலன் என்றிட **
 மின் இயல் மேகம் * விரைந்து எதிர் வந்தாற்போல் *
 என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ *
 எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1)

Pasuram 86 · corpus 98

Pasuram 86

Study resources at Uveda
செங்கமலப் பூவில் * தேன் உண்ணும் வண்டே போல் *
 பங்கிகள் வந்து * உன் பவளவாய் மொய்ப்ப **
 சங்கு வில் வாள் தண்டு * சக்கரம் ஏந்திய *
 அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ *
 ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)

Pasuram 87 · corpus 99

Pasuram 87

Study resources at Uveda
பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
 நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நல் பொய்கை புக்கு **
 அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள்செய்த *
 அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ *
 ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)

Pasuram 88 · corpus 100

Pasuram 88

Study resources at Uveda
நாறிய சாந்தம் * நமக்கு இறை நல்கு என்ன *
 தேறி அவளும் * திருவுடம்பில் பூச **
 ஊறிய கூனினை * உள்ளே ஒடுங்க * அன்று
 ஏற உருவினாய் அச்சோ அச்சோ *
 எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4)

Pasuram 89 · corpus 101

Pasuram 89

Study resources at Uveda
கழல் மன்னர் சூழக் * கதிர் போல் விளங்கி *
 எழலுற்று மீண்டே * இருந்து உன்னை நோக்கும் **
 சுழலை பெரிது உடைத் * துச்சோதனனை *
 அழல விழித்தானே அச்சோ அச்சோ *
 ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5)

Pasuram 90 · corpus 102

Pasuram 90

Study resources at Uveda
போர் ஒக்கப் பண்ணி * இப் பூமிப்பொறை தீர்ப்பான் *
 தேர் ஒக்க ஊர்ந்தாய் * செழுந்தார் விசயற்காய் **
 கார் ஒக்கு மேனிக் * கரும் பெருங் கண்ணனே *
 ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ *
 ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)

Pasuram 91 · corpus 103

Pasuram 91

Study resources at Uveda
மிக்க பெரும்புகழ் * மாவலி வேள்வியில் *
 தக்கது இது அன்று என்று * தானம் விலக்கிய **
 சுக்கிரன் கண்ணைத் * துரும்பாற் கிளறிய *
 சக்கரக் கையனே அச்சோ அச்சோ *
 சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)

Pasuram 92 · corpus 104

Pasuram 92

Study resources at Uveda
என் இது மாயம்? * என் அப்பன் அறிந்திலன் *
 முன்னைய வண்ணமே கொண்டு * அளவாய் என்ன **
 மன்னு நமுசியை * வானில் சுழற்றிய *
 மின்னு முடியனே அச்சோ அச்சோ *
 வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8)

Pasuram 93 · corpus 105

Pasuram 93

Study resources at Uveda
கண்ட கடலும் * மலையும் உலகு ஏழும் *
 முண்டத்துக்கு ஆற்றா * முகில்வண்ணா ஓ என்று **
 இண்டைச் சடைமுடி * ஈசன் இரக்கொள்ள *
 மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ *
 மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)

Pasuram 94 · corpus 106

Pasuram 94

Study resources at Uveda
துன்னிய பேரிருள் * சூழ்ந்து உலகை மூட *
 மன்னிய நான்மறை * முற்றும் மறைந்திட **
 பின் இவ் உலகினில் * பேரிருள் நீங்க * அன்று
 அன்னமது ஆனானே அச்சோ அச்சோ *
 அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10)

Pasuram 95 · corpus 107

Pasuram 95

Study resources at Uveda
நச்சுவார் முன் நிற்கும் * நாராயணன் தன்னை *
 அச்சோ வருக என்று * ஆய்ச்சி உரைத்தன **
 மச்சு அணி மாடப் * புதுவைக்கோன் பட்டன் சொல் *
 நிச்சலும் பாடுவார் * நீள் விசும்பு ஆள்வரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.