Corpus pasurams 108–117

This page preserves the source-defined decade 1, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 96 · corpus 108

Pasuram 96

Study resources at Uveda
வட்டு நடுவே * வளர்கின்ற * மாணிக்க
 மொட்டு நுனையில் * முளைக்கின்ற முத்தே போல் **
 சொட்டுச் சொட்டு என்னத் * துளிக்கத் துளிக்க * என்
 குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் *
 கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான் (1)

Pasuram 97 · corpus 109

Pasuram 97

Study resources at Uveda
கிண்கிணி கட்டிக் * கிறி கட்டிக் * கையினில் *
 கங்கணம் இட்டுக் * கழுத்தில் தொடர் கட்டி **
 தன் கணத்தாலே * சதிரா நடந்து வந்து *
 என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான் *
 எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (2)

Pasuram 98 · corpus 110

Pasuram 98

Study resources at Uveda
கத்தக் கதித்துக் * கிடந்த பெருஞ்செல்வம் *
 ஒத்துப் பொருந்திக்கொண்டு * உண்ணாது மண் ஆள்வான் **
 கொத்துத் தலைவன் * குடிகெடத் தோன்றிய *
 அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் *
 ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)

Pasuram 99 · corpus 111

Pasuram 99

Study resources at Uveda
நாந்தகம் ஏந்திய * நம்பி சரண் என்று *
 தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி * தரணியில் **
 வேந்தர்கள் உட்க * விசயன் மணித் திண்தேர் *
 ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் *
 உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (4)

Pasuram 100 · corpus 112

Pasuram 100

Study resources at Uveda
வெண்கலப் பத்திரம் கட்டி * விளையாடி *
 கண் பல செய்த * கருந்தழைக் காவின் கீழ் **
 பண் பல பாடிப் * பல்லாண்டு இசைப்ப * பண்டு
 மண் பல கொண்டான் புறம்புல்குவான் *
 வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)

Pasuram 101 · corpus 113

Pasuram 101

Study resources at Uveda
சத்திரம் ஏந்தித் * தனி ஒரு மாணியாய் *
 உத்தர வேதியில் * நின்ற ஒருவனை **
 கத்திரியர் காணக் * காணி முற்றும் கொண்ட *
 பத்திராகாரன் புறம்புல்குவான் *
 பார் அளந்தான் என் புறம்புல்குவான் (6)

Pasuram 102 · corpus 114

Pasuram 102

Study resources at Uveda
பொத்த உரலைக் கவிழ்த்து * அதன்மேல் ஏறி *
 தித்தித்த பாலும் * தடாவினில் வெண்ணெயும் **
 மெத்தத் திருவயிறு * ஆர விழுங்கிய *
 அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் *
 ஆழியான் என்னைப் புறம்புல்குவான் (7)

Pasuram 103 · corpus 115

Pasuram 103

Study resources at Uveda
மூத்தவை காண * முது மணற்குன்று ஏறி *
 கூத்து உவந்து ஆடிக் * குழலால் இசை பாடி **
 வாய்த்த மறையோர் வணங்க * இமையவர்
 ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான் *
 எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)

Pasuram 104 · corpus 116

Pasuram 104

Study resources at Uveda
கற்பகக் காவு * கருதிய காதலிக்கு *
 இப்பொழுது ஈவன் என்று * இந்திரன் காவினில் **
 நிற்பன செய்து * நிலாத் திகழ் முற்றத்துள் *
 உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் *
 உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (9)

Pasuram 105 · corpus 117

Pasuram 105

Study resources at Uveda
ஆய்ச்சி அன்று * ஆழிப் பிரான் புறம்புல்கிய *
 வேய்த் தடந்தோளி சொல் * விட்டுசித்தன் மகிழ்ந்து **
 ஈத்த தமிழ் இவை * ஈரைந்தும் வல்லவர் *
 வாய்த்த நன்மக்களைப் பெற்று * மகிழ்வரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.