Corpus pasurams 118–127

This page preserves the source-defined decade 2, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 106 · corpus 118

Pasuram 106

Study resources at Uveda
மெச்சு ஊது சங்கம் இடத்தான் * நல் வேய் ஊதி *
 பொய்ச் சூதில் தோற்ற * பொறை உடை மன்னர்க்காய் **
 பத்து ஊர் பெறாது அன்று * பாரதம் கைசெய்த *
 அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1)

Pasuram 107 · corpus 119

Pasuram 107

Study resources at Uveda
மலை புரை தோள் மன்னவரும் * மாரதரும் மற்றும் *
 பலர் குலைய * நூற்றுவரும் பட்டழிய ** பார்த்தன்
 சிலை வளையத் * திண்தேர்மேல் முன்நின்ற * செங்கண்
 அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (2)

Pasuram 108 · corpus 120

Pasuram 108

Study resources at Uveda
காயும் நீர் புக்குக் * கடம்பு ஏறி * காளியன்
 தீய பணத்தில் * சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி **
 வேயின் குழல் ஊதி * வித்தகனாய் நின்ற *
 ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3)

Pasuram 109 · corpus 121

Pasuram 109

Study resources at Uveda
இருட்டில் பிறந்து போய் * ஏழை வல் ஆயர் *
 மருட்டைத் தவிர்ப்பித்து * வன் கஞ்சன் மாளப் **
 புரட்டி அந்நாள் எங்கள் * பூம்பட்டுக் கொண்ட *
 அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (4)

Pasuram 110 · corpus 122

Pasuram 110

Study resources at Uveda
சேப் பூண்ட * சாடு சிதறித் திருடி * நெய்க்கு
 ஆப்பூண்டு * நந்தன் மனைவி கடைத் தாம்பால் **
 சோப்பூண்டு துள்ளித் * துடிக்கத் துடிக்க * அன்று
 ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (5)

Pasuram 111 · corpus 123

Pasuram 111

Study resources at Uveda
செப்பு இள மென்முலைத் * தேவகி நங்கைக்கு *
 சொப்படத் தோன்றி * தொறுப்பாடியோம் வைத்த **
 துப்பமும் பாலும் * தயிரும் விழுங்கிய *
 அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6)

Pasuram 112 · corpus 124

Pasuram 112

Study resources at Uveda
தத்துக் கொண்டாள் கொலோ? * தானே பெற்றாள் கொலோ? *
 சித்தம் அனையாள் * அசோதை இளஞ்சிங்கம் **
 கொத்து ஆர் கருங்குழல் * கோபால கோளரி *
 அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7)

Pasuram 113 · corpus 125

Pasuram 113

Study resources at Uveda
கொங்கை வன் * கூனிசொல் கொண்டு * குவலயத்
 துங்கக் கரியும் * பரியும் இராச்சியமும் **
 எங்கும் பரதற்கு அருளி * வன்கான் அடை *
 அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (8)

Pasuram 114 · corpus 126

Pasuram 114

Study resources at Uveda
பதக முதலைவாய்ப் * பட்ட களிறு *
 கதறிக் கைகூப்பி * என் கண்ணா கண்ணா என்ன **
 உதவப் புள் ஊர்ந்து * அங்கு உறுதுயர் தீர்த்த *
 அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் *
 அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9)

Pasuram 115 · corpus 127

Pasuram 115

Study resources at Uveda
வல்லாள் இலங்கை மலங்கச் * சரந் துரந்த *
 வில்லாளனை * விட்டுசித்தன் விரித்த **
 சொல் ஆர்ந்த அப்பூச்சிப் * பாடல் இவை பத்தும்
 வல்லார் போய் * வைகுந்தம் மன்னி இருப்பரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.