This page preserves the source-defined decade 2, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
தந்தம் மக்கள் அழுது சென்றால் * தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் *
வந்து நின்மேல் பூசல் செய்ய * வாழ வல்ல வாசுதேவா **
உந்தையார் உன்திறத்தர் அல்லர் * உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் *
நந்தகோபன் அணி சிறுவா * நான் சுரந்த முலை உணாயே (3)
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் * பெறுதும் என்னும் ஆசையாலே *
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் * கண்ணிணையால் கலக்க நோக்கி **
வண்டு உலாம் பூங்குழலினார் * உன் வாயமுதம் உண்ண வேண்டி *
கொண்டு போவான் வந்து நின்றார் * கோவிந்தா நீ முலை உணாயே (7)
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் * இருவர் அங்கம் எரிசெய்தாய் * உன்
திரு மலிந்து திகழ் மார்வு * தேக்க வந்து என் அல்குல் ஏறி **
ஒரு முலையை வாய்மடுத்து * ஒரு முலையை நெருடிக்கொண்டு *
இரு முலையும் முறை முறையாய் * ஏங்கி ஏங்கி இருந்து உணாயே (8)
ஓட ஓடக் கிண்கிணிகள் * ஒலிக்கும் ஓசைப் பாணியாலே *
பாடிப் பாடி வருகின்றாயைப் * பற்பநாபன் என்று இருந்தேன் **
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு * அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி *
ஓடி ஒடிப் போய்விடாதே * உத்தமா நீ முலை உணாயே (10)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி * மாதவா உண் என்ற மாற்றம் *
நீர் அணிந்த குவளை வாசம் * நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப் **
பார் அணிந்த தொல் புகழான் * பட்டர்பிரான் பாடல் வல்லார் *
சீர் அணிந்த செங்கண்மால் மேல் * சென்ற சிந்தை பெறுவர் தாமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.