Corpus pasurams 213–222

This page preserves the source-defined decade 2, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 201 · corpus 213

Pasuram 201

Study resources at Uveda
ஆற்றில் இருந்து * விளையாடுவோங்களை *
 சேற்றால் எறிந்து * வளை துகில் கைக்கொண்டு **
 காற்றில் கடியனாய் * ஓடி அகம் புக்கு *
 மாற்றமும் தாரானால் இன்று முற்றும் *
 வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)

Pasuram 202 · corpus 214

Pasuram 202

Study resources at Uveda
குண்டலம் தாழ * குழல் தாழ நாண் தாழ *
 எண் திசையோரும் * இறைஞ்சித் தொழுது ஏத்த **
 வண்டு அமர் பூங்குழலார் * துகில் கைக்கொண்டு *
 விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் *
 வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)

Pasuram 203 · corpus 215

Pasuram 203

Study resources at Uveda
தடம் படு தாமரைப் * பொய்கை கலக்கி *
 விடம் படு நாகத்தை * வால் பற்றி ஈர்த்து **
 படம் படு பைந்தலை * மேல் எழப் பாய்ந்திட்டு *
 உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் *
 உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)

Pasuram 204 · corpus 216

Pasuram 204

Study resources at Uveda
தேனுகன் ஆவி செகுத்துப் * பனங்கனி
 தான் எறிந்திட்ட * தடம் பெருந்தோளினால் *
 வானவர் கோன் விட * வந்த மழை தடுத்து **
 ஆனிரை காத்தானால் இன்று முற்றும் *
 அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)

Pasuram 205 · corpus 217

Pasuram 205

Study resources at Uveda
ஆய்ச்சியர் சேரி * அளை தயிர் பால் உண்டு *
 பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் * பிடியுண்டு **
 வேய்த் தடந்தோளினார் * வெண்ணெய் கோள் மாட்டாது * அங்கு
 ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் *
 அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)

Pasuram 206 · corpus 218

Pasuram 206

Study resources at Uveda
தள்ளித் தளர் நடை யிட்டு * இளம் பிள்ளையாய் *
 உள்ளத்தின் உள்ளே * அவளை உற நோக்கி **
 கள்ளத்தினால் வந்த * பேய்ச்சி முலை உயிர் *
 துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் *
 துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)

Pasuram 207 · corpus 219

Pasuram 207

Study resources at Uveda
மாவலி வேள்வியில் * மாண் உருவாய்ச் சென்று *
 மூவடி தா என்று * இரந்த இம் மண்ணினை **
 ஒரடி இட்டு * இரண்டாம் அடிதன்னிலே *
 தாவடி இட்டானால் இன்று முற்றும் *
 தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)

Pasuram 208 · corpus 220

Pasuram 208

Study resources at Uveda
தாழை தண் ஆம்பல் * தடம் பெரும் பொய்கைவாய் *
 வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் **
 வேழம் துயர் கெட * விண்ணோர் பெருமானாய் *
 ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் *
 அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)

Pasuram 209 · corpus 221

Pasuram 209

Study resources at Uveda
வானத்து எழுந்த * மழை முகில் போல் எங்கும் *
 கானத்து மேய்ந்து * களித்து விளையாடி **
 ஏனத்து உருவாய் * இடந்த இம் மண்ணினை *
 தானத்தே வைத்தானால் இன்று முற்றும் *
 தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)

Pasuram 210 · corpus 222

Pasuram 210

Study resources at Uveda
அங் கமலக் கண்ணன்தன்னை * அசோதைக்கு *
 மங்கை நல்லார்கள் * தாம் வந்து முறைப்பட்ட **
 அங்கு அவர் சொல்லைப் *
 புதுவைக்கோன் பட்டன் சொல் *
 இங்கு இவை வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.