Corpus pasurams 202–212

This page preserves the source-defined decade 2, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 190 · corpus 202

Pasuram 190

Study resources at Uveda
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
 வெற்பிடை இட்டு * அதன் ஓசை கேட்கும்
 கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் *
 காக்ககில்லோம் உன்மகனைக் காவாய் **
 புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை *
 புரை புரையால் இவை செய்ய வல்ல *
 அண்ணல் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற *
 அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (1) *

Pasuram 191 · corpus 203

Pasuram 191

Study resources at Uveda
வருக வருக வருக இங்கே *
வாமன நம்பீ வருக இங்கே *
 கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் *
 காகுத்த நம்பீ வருக இங்கே **
 அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் *
 அஞ்சனவண்ணா அசலகத்தார் *
 பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் *
 பாவியேனுக்கு இங்கே போதராயே (2)

Pasuram 192 · corpus 204

Pasuram 192

Study resources at Uveda
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு *
தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் *
 உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் *
 உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான் **
 அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் *
 வழக்கோ? அசோதாய் *
 வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய் *
 வாழ ஒட்டான் மதுசூதனனே (3)

Pasuram 193 · corpus 205

Pasuram 193

Study resources at Uveda
கொண்டல்வண்ணா இங்கே போதராயே *
 கோயில் பிள்ளாய் இங்கே போதராயே *
 தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த *
 திருநாரணா இங்கே போதராயே **
 உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி *
 ஓடி அகம் புக ஆய்ச்சிதானும் *
 கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக் *
 கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)

Pasuram 194 · corpus 206

Pasuram 194

Study resources at Uveda
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் *
பல்வளையாள் என்மகள் இருப்ப *
 மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று *
 இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் **
 சாளக்கிராமம் உடைய நம்பி *
 சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் *
 ஆலைக் கரும்பின் மொழி அனைய *
 அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (5)

Pasuram 195 · corpus 207

Pasuram 195

Study resources at Uveda
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் *
 போதரேன் என்னாதே போதர் கண்டாய்
 ஏதேனும் சொல்லி அசலகத்தார் *
 ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் **
 கோதுகலம் உடைக்குட்டனேயோ *
 குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா *
 வேதப் பொருளே என் வேங்கடவா *
 வித்தகனே இங்கே போதராயே 6

Pasuram 196 · corpus 208

Pasuram 196

Study resources at Uveda
செந்நெல் அரிசி சிறு பருப்புச் *
 செய்த அக்காரம் நறுநெய் பாலால் *
 பன்னிரண்டு திருவோணம் அட்டேன் *
 பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் **
 இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி *
 எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் *
 உன்மகன் தன்னை அசோதை நங்காய் *
 கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (7)

Pasuram 197 · corpus 209

Pasuram 197

Study resources at Uveda
கேசவனே இங்கே போதராயே *
கில்லேன் என்னாது இங்கே போதராயே *
 நேசம் இலாதார் அகத்து இருந்து *
 நீ விளையாடாதே போதராயே **
 தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் *
 தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
 தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் *
 தாமோதரா இங்கே போதராயே (8)

Pasuram 198 · corpus 210

Pasuram 198

Study resources at Uveda
கன்னல் இலட்டுவத்தோடு சீடை *
காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு *
 என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன் *
 இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் **
 பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் *
 பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் *
 உன்மகன் தன்னை அசோதை நங்காய் *
 கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (9)

Pasuram 199 · corpus 211

Pasuram 199

Study resources at Uveda
சொல்லில் அரசிப் படுதி நங்காய் *
சூழல் உடையன் உன்பிள்ளை தானே *
 இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் *
 கையில் வளையைக் கழற்றிக்கொண்டு **
 கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற *
 அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
 நல்லன நாவல் பழங்கள் கொண்டு *
 நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே (10)

Pasuram 200 · corpus 212

Pasuram 200

Study resources at Uveda
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் *
வருபுனல் காவிரித் தென்னரங்கன் *
 பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் *
 பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் **
 கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் *
 கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி *
 எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் *
 இணையடி என்தலை மேலனவே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.