This page preserves the source-defined decade 2, chapter 3 grouping and brings its 13 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும் *
மகரக்குழை கொண்டுவைத்தேன் *
வெய்யவே காதில் திரியை இடுவன் *
நீ வேண்டிய தெல்லாம் தருவன் **
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய *
ஒண்சுடர் ஆயர்கொழுந்தே *
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து *
மாதவனே இங்கே வாராய் (3)
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு *
வார்காது தாழப் பெருக்கிக் *
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள் *
கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் **
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால் *
இனிய பலாப்பழம் தந்து *
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் *
சோத்தம் பிரான் இங்கே வாராய் (4)
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் *
உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி *
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி *
மதுசூதனே என்று இருந்தேன் **
புண் ஏதும் இல்லை உன்காது மறியும் *
பொறுத்து இறைப் போது இரு நம்பீ *
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா *
காவலனே முலை உணாயே (6)
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி *
நின்காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு *
மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் *
பசுநிரை மேய்த்தாய் **
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா *
திரு ஆயர்பாடிப் பிரானே *
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே *
விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் *
என்னை நான் மண் உண்டேனாக *
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் *
அனைவர்க்கும் காட்டிற்றிலையே? **
வன் புற்று அரவின் பகைக் கொடி * வாமன நம்பீ
உன் காதுகள் தூரும் *
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே *
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8)
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து *
வலியவே காதில் கடிப்பை *
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்? *
காதுகள் நொந்திடும் கில்லேன் **
நாவல் பழம் கொண்டுவைத்தேன் *
இவை ஆணாய் நம்பீ * முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட *
தாமோதரா இங்கே வாராய் (12)
வார் காது தாழப் பெருக்கி அமைத்து *
மகரக்குழை இட வேண்டி *
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் *
சிந்தையுள் நின்று திகழ **
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன் *
பன்னிரு நாமத்தால் சொன்ன *
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் *
அச்சுதனுக்கு அடியாரே (13)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.