Corpus pasurams 152–161

This page preserves the source-defined decade 2, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 140 · corpus 152

Pasuram 140

Study resources at Uveda
வெண்ணெய் அளைந்த குணுங்கும் * விளையாடு புழுதியும் கொண்டு *
 திண்ணென இவ் இரா உன்னைத் * தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் **
 எண்ணெய் புளிப்பழம் கொண்டு * இங்கு எத்தனை போதும் இருந்தேன் *
 நண்ணல் அரிய பிரானே * நாரணா நீராட வாராய் (1)

Pasuram 141 · corpus 153

Pasuram 141

Study resources at Uveda
கன்றுகள் ஓடச் செவியில் * கட்டெறும்பு பிடித்து இட்டால் *
 தென்றிக் கெடும் ஆகில் * வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் **
 நின்ற மராமரம் சாய்த்தாய் * நீ பிறந்த திருவோணம் *
 இன்று நீ நீராட வேண்டும் * எம்பிரான் ஓடாதே வாராய் (2)

Pasuram 142 · corpus 154

Pasuram 142

Study resources at Uveda
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு * பின்னையும் நில்லாது என்நெஞ்சம் *
 ஆய்ச்சியர் எல்லாரும் கூடி * அழைக்கவும் நான் முலை தந்தேன் **
 காய்ச்சின நீரொடு நெல்லி * கடாரத்தில் பூரித்து வைத்தேன் *
 வாய்த்த புகழ் மணிவண்ணா * மஞ்சனம் ஆட நீ வாராய் (3)

Pasuram 143 · corpus 155

Pasuram 143

Study resources at Uveda
கஞ்சன் புணர்ப்பினில் வந்த * கடிய சகடம் உதைத்து *
 வஞ்சகப் பேய்மகள் துஞ்ச * வாய் முலை வைத்த பிரானே **
 மஞ்சளும் செங்கழுநீரின் * வாசிகையும் நறுஞ்சாந்தும் *
 அஞ்சனமும் கொண்டு வைத்தேன் * அழகனே நீராட வாராய் (4)

Pasuram 144 · corpus 156

Pasuram 144

Study resources at Uveda
அப்பம் கலந்த சிற்றுண்டி * அக்காரம் பாலில் கலந்து *
 சொப்பட நான் சுட்டு வைத்தேன் * தின்னல் உறுதியேல் நம்பி **
 செப்பு இள மென்முலையார்கள் * சிறுபுறம் பேசிச் சிரிப்பர் *
 சொப்பட நீராட வேண்டும் * சோத்தம் பிரான் இங்கே வாராய் (5)

Pasuram 145 · corpus 157

Pasuram 145

Study resources at Uveda
எண்ணெய்க் குடத்தை உருட்டி * இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி *
 கண்ணைப் புரட்டி விழித்துக் * கழகண்டு செய்யும் பிரானே **
 உண்ணக் கனிகள் தருவன் * ஒலிகடல் ஓதநீர் போலே *
 வண்ணம் அழகிய நம்பீ * மஞ்சனம் ஆட நீ வாராய் (6)

Pasuram 146 · corpus 158

Pasuram 146

Study resources at Uveda
கறந்த நற்பாலும் தயிரும் * கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் *
 பிறந்ததுவே முதலாகப் * பெற்றறியேன் எம்பிரானே **
 சிறந்த நற்றாய் அலர் தூற்றும் * என்பதனால் பிறர் முன்னே *
 மறந்தும் உரையாட மாட்டேன் * மஞ்சனம் ஆட நீ வாராய் (7)

Pasuram 147 · corpus 159

Pasuram 147

Study resources at Uveda
கன்றினை வால் ஓலை கட்டி * கனிகள் உதிர எறிந்து *
 பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் * பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் **
 நின்திறத்தேன் அல்லேன் நம்பீ * நீ பிறந்த திரு நன்னாள் *
 நன்று நீ நீராட வேண்டும் * நாரணா ஓடாதே வாராய் (8)

Pasuram 148 · corpus 160

Pasuram 148

Study resources at Uveda
பூணித் தொழுவினில் புக்குப் * புழுதி அளைந்த பொன் மேனி *
 காணப் பெரிதும் உகப்பன் * ஆகிலும் கண்டார் பழிப்பர் **
 நாண் எத்தனையும் இலாதாய் * நப்பின்னை காணில் சிரிக்கும் *
 மாணிக்கமே என் மணியே * மஞ்சனம் ஆட நீ வாராய் (9)

Pasuram 149 · corpus 161

Pasuram 149

Study resources at Uveda
கார் மலி மேனி நிறத்துக் * கண்ணபிரானை உகந்து *
 வார் மலி கொங்கை யசோதை * மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப் **
 பார் மலி தொல் புதுவைக் கோன் * பட்டர்பிரான் சொன்ன பாடல் *
 சீர் மலி செந்தமிழ் வல்லார் * தீவினை யாதும் இலரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.