Corpus pasurams 162–171

This page preserves the source-defined decade 2, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 150 · corpus 162

Pasuram 150

Study resources at Uveda
பின்னை மணாளனைப் * பேரில் கிடந்தானை *
 முன்னை அமரர் * முதல் தனி வித்தினை **
 என்னையும் எங்கள் * குடி முழுது ஆட்கொண்ட *
 மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் *
 மாதவன் தன் குழல்வாராய் அக்காக்காய் (1)

Pasuram 151 · corpus 163

Pasuram 151

Study resources at Uveda
பேயின் முலை உண்ட * பிள்ளை இவன் முன்னம் *
 மாயச் சகடும் * மருதும் இறுத்தவன் **
 காயாமலர் வண்ணன் * கண்ணன் கருங்குழல் *
 தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய் *
 தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2)

Pasuram 152 · corpus 164

Pasuram 152

Study resources at Uveda
திண்ணக் கலத்தில் * திரை உறிமேல் வைத்த *
 வெண்ணெய் விழுங்கி * விரைய உறங்கிடும்
 அண்ணல் ** அமரர் பெருமானை * ஆயர்தம்
 கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் *
 கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3)

Pasuram 153 · corpus 165

Pasuram 153

Study resources at Uveda
பள்ளத்தில் மேயும் * பறவை உருக் கொண்டு *
 கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு **
 புள் இது என்று * பொதுக்கோ வாய் கீண்டிட்ட *
 பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் *
 பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் (4)

Pasuram 154 · corpus 166

Pasuram 154

Study resources at Uveda
கற்றினம் மேய்த்துக் * கனிக்கு ஒரு கன்றினைப் *
 பற்றி எறிந்த * பரமன் திருமுடி **
 உற்றன பேசி * நீ ஓடித் திரியாதே *
 அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் *
 ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5)

Pasuram 155 · corpus 167

Pasuram 155

Study resources at Uveda
கிழக்கில் குடி மன்னர் * கேடு இலாதாரை *
 அழிப்பான் நினைந்திட்டு * அவ் ஆழிஅதனால் **
 விழிக்கும் அளவிலே * வேர் அறுத்தானைக் *
 குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய் *
 கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6)

Pasuram 156 · corpus 168

Pasuram 156

Study resources at Uveda
பிண்டத் திரளையும் * பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் *
 உண்டற்கு வேண்டி * நீ ஓடித் திரியாதே **
 அண்டத்து அமரர் * பெருமான் அழகு அமர் *
 வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் *
 மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7)

Pasuram 157 · corpus 169

Pasuram 157

Study resources at Uveda
உந்தி எழுந்த * உருவ மலர்தன்னில் *
 சந்தச் சதுமுகன் * தன்னைப் படைத்தவன் **
 கொந்தக் குழலைக் * குறந்து புளி அட்டி *
 தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் *
 தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8)

Pasuram 158 · corpus 170

Pasuram 158

Study resources at Uveda
மன்னன்தன் தேவிமார் * கண்டு மகிழ்வு எய்த *
 முன் இவ் உலகினை * முற்றும் அளந்தவன் **
 பொன்னின் முடியினைப் * பூ அணைமேல் வைத்து *
 பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் *
 பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9)

Pasuram 159 · corpus 171

Pasuram 159

Study resources at Uveda
கண்டார் பழியாமே * அக்காக்காய் * கார்வண்ணன்
 வண்டு ஆர் குழல்வார வா * என்ற ஆய்ச்சி சொல் **
 விண் தோய் மதிள் * வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் *
 கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.