Corpus pasurams 172–181

This page preserves the source-defined decade 2, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 160 · corpus 172

Pasuram 160

Study resources at Uveda
வேலிக் கோல் வெட்டி * விளையாடு வில் ஏற்றி *
 தாலிக் கொழுந்தைத் * தடங்கழுத்தில் பூண்டு **
 பீலித் தழையைப் * பிணைத்துப் பிறகிட்டு *
 காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா *
 கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (1)

Pasuram 161 · corpus 173

Pasuram 161

Study resources at Uveda
கொங்கும் குடந்தையும் * கோட்டியூரும் பேரும் *
 எங்கும் திரிந்து * விளையாடும் என்மகன் **
 சங்கம் பிடிக்கும் * தடக்கைக்குத் தக்க * நல்
 அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா *
 அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2)

Pasuram 162 · corpus 174

Pasuram 162

Study resources at Uveda
கறுத்திட்டு எதிர்நின்ற * கஞ்சனைக் கொன்றான் *
 பொறுத்திட்டு எதிர்வந்த * புள்ளின் வாய் கீண்டான் **
 நெறித்த குழல்களை * நீங்க முன் ஓடி *
 சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா *
 தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (3)

Pasuram 163 · corpus 175

Pasuram 163

Study resources at Uveda
ஒன்றே உரைப்பான் * ஒரு சொல்லே சொல்லுவான் *
 துன்று முடியான் * துரியோதனன் பக்கல் **
 சென்று அங்குப் பாரதம் * கையெறிந்தானுக்கு *
 கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா *
 கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (4)

Pasuram 164 · corpus 176

Pasuram 164

Study resources at Uveda
சீர் ஒன்று தூதாய்த் * துரியோதனன் பக்கல் *
 ஊர் ஒன்று வேண்டிப் * பெறாத உரோடத்தால் **
 பார் ஒன்றிப் பாரதம் * கைசெய்து பார்த்தற்குத் *
 தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா *
 தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (5)

Pasuram 165 · corpus 177

Pasuram 165

Study resources at Uveda
ஆலத்து இலையான் * அரவின் அணை மேலான் *
 நீலக் கடலுள் * நெடுங்காலம் கண்வளர்ந்தான் **
 பாலப் பிராயத்தே * பார்த்தற்கு அருள்செய்த *
 கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா *
 குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (6)

Pasuram 166 · corpus 178

Pasuram 166

Study resources at Uveda
பொன்திகழ் * சித்திரகூடப் பொருப்பினில் *
 உற்ற வடிவில் * ஒரு கண்ணும் கொண்ட ** அக்
 கற்றைக் குழலன் * கடியன் விரைந்து உன்னை *
 மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா *
 மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா (7)

Pasuram 167 · corpus 179

Pasuram 167

Study resources at Uveda
மின்னிடைச் சீதை பொருட்டா * இலங்கையர் *
 மன்னன் மணிமுடி * பத்தும் உடன் வீழ **
 தன் நிகர் ஒன்று இல்லாச் * சிலை கால் வளைத்து இட்ட *
 மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா *
 வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (8)

Pasuram 168 · corpus 180

Pasuram 168

Study resources at Uveda
தென் இலங்கை மன்னன் * சிரம் தோள் துணிசெய்து *
 மின் இலங்கும் பூண் * விபீடண நம்பிக்கு **
 என் இலங்கும் நாமத்து அளவும் * அரசு என்ற *
 மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா *
 வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா (9)

Pasuram 169 · corpus 181

Pasuram 169

Study resources at Uveda
அக்காக்காய் நம்பிக்குக் * கோல் கொண்டு வா என்று *
 மிக்காள் உரைத்த சொல் * வில்லிபுத்தூர்ப் பட்டன் **
 ஒக்க உரைத்த * தமிழ் பத்தும் வல்லவர் *
 மக்களைப் பெற்று * மகிழ்வர் இவ் வையத்தே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.