Corpus pasurams 182–191

This page preserves the source-defined decade 2, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 170 · corpus 182

Pasuram 170

Study resources at Uveda
ஆனிரை மேய்க்க நீ போதி * அருமருந்து ஆவது அறியாய் *
 கானகம் எல்லாம் திரிந்து * உன் கரிய திருமேனி வாட **
 பானையில் பாலைப் பருகிப் * பற்றாதார் எல்லாம் சிரிப்ப *
 தேனில் இனிய பிரானே * செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)

Pasuram 171 · corpus 183

Pasuram 171

Study resources at Uveda
கரு உடை மேகங்கள் கண்டால் * உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் *
 உரு உடையாய் உலகு ஏழும் * உண்டாக வந்து பிறந்தாய் **
 திரு உடையாள் மணவாளா * திருவரங்கத்தே கிடந்தாய் *
 மருவி மணம் கமழ்கின்ற * மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)

Pasuram 172 · corpus 184

Pasuram 172

Study resources at Uveda
மச்சொடு மாளிகை ஏறி * மாதர்கள்தம் இடம் புக்கு *
 கச்சொடு பட்டைக் கிழித்து * காம்பு துகில் அவை கீறி **
 நிச்சலும் தீமைகள் செய்வாய் * நீள் திருவேங்கடத்து எந்தாய் *
 பச்சைத் தமனகத்தோடு * பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)

Pasuram 173 · corpus 185

Pasuram 173

Study resources at Uveda
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத் * தீமை செய்யாதே *
 மருவும் தமனகமும் சீர் * மாலை மணம் கமழ்கின்ற **
 புருவம் கருங்குழல் நெற்றி * பொலிந்த முகில் கன்று போலே *
 உருவம் அழகிய நம்பீ * உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)

Pasuram 174 · corpus 186

Pasuram 174

Study resources at Uveda
புள்ளினை வாய் பிளந்திட்டாய் * பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் *
 கள்ள அரக்கியை மூக்கொடு * காவலனைத் தலை கொண்டாய் **
 அள்ளி நீ வெண்ணெய் விழுங்க * அஞ்சாது அடியேன் அடித்தேன் *
 தெள்ளிய நீரில் எழுந்த * செங்கழுநீர் சூட்ட வாராய் (5)

Pasuram 175 · corpus 187

Pasuram 175

Study resources at Uveda
எருதுகளோடு பொருதி * ஏதும் உலோபாய் காண் நம்பீ *
 கருதிய தீமைகள் செய்து * கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் **
 தெருவின்கண் தீமைகள் செய்து * சிக்கென மல்லர்களோடு *
 பொருது வருகின்ற பொன்னே * புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)

Pasuram 176 · corpus 188

Pasuram 176

Study resources at Uveda
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே *
 மடம் கொள் மதிமுகத்தாரை * மால்செய்ய வல்ல என் மைந்தா **
 இடந்திட்டு இரணியன் நெஞ்சை * இரு பிளவு ஆக முன் கீண்டாய் *
 குடந்தைக் கிடந்த எம் கோவே * குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)

Pasuram 177 · corpus 189

Pasuram 177

Study resources at Uveda
சீமாலிகன் அவனோடு * தோழமை கொள்ளவும் வல்லாய் *
 சாமாறு அவனை நீ எண்ணிச் * சக்கரத்தால் தலை கொண்டாய் **
 ஆமாறு அறியும் பிரானே * அணி அரங்கத்தே கிடந்தாய் *
 ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் * இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)

Pasuram 178 · corpus 190

Pasuram 178

Study resources at Uveda
அண்டத்து அமரர்கள் சூழ * அத்தாணியுள் அங்கு இருந்தாய் *
 தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் * தூமலராள் மணவாளா **
 உண்டிட்டு உலகினை ஏழும் * ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய் *
 கண்டு நான் உன்னை உகக்கக் * கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)

Pasuram 179 · corpus 191

Pasuram 179

Study resources at Uveda
செண்பக மல்லிகையோடு * செங்கழுநீர் இருவாட்சி *
 எண் பகர் பூவும் கொணர்ந்தேன் * இன்று இவை சூட்ட வா என்று **
 மண் பகர் கொண்டானை * ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை *
 பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் * பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.