Corpus pasurams 192–201

This page preserves the source-defined decade 2, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 180 · corpus 192

Pasuram 180

Study resources at Uveda
இந்திரனோடு பிரமன் * ஈசன் இமையவர் எல்லாம் *
 மந்திர மா மலர் கொண்டு * மறைந்து உவராய் வந்து நின்றார் **
 சந்திரன் மாளிகை சேரும் * சதுரர்கள் வெள்ளறை நின்றாய் *
 அந்தியம் போது இது ஆகும் * அழகனே காப்பிட வாராய் (1)

Pasuram 181 · corpus 193

Pasuram 181

Study resources at Uveda
கன்றுகள் இல்லம் புகுந்து * கதறுகின்ற பசு எல்லாம் *
 நின்றொழிந்தேன் உன்னைக் கூவி * நேசமேல் ஒன்றும் இலாதாய் **
 மன்றில் நில்லேல் அந்திப் போது * மதிள் திருவெள்ளறை நின்றாய் *
 நன்று கண்டாய் என்தன் சொல்லு * நான் உன்னைக் காப்பிட வாராய் (2)

Pasuram 182 · corpus 194

Pasuram 182

Study resources at Uveda
செப்பு ஓது மென்முலையார்கள் * சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு *
 அப்போது நான் உரப்பப் போய் * அடிசிலும் உண்டிலை ஆள்வாய் **
 முப் போதும் வானவர் ஏத்தும் * முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
 இப்போது நான் ஒன்றும் செய்யேன் * எம்பிரான் காப்பிட வாராய் (3)

Pasuram 183 · corpus 195

Pasuram 183

Study resources at Uveda
கண்ணில் மணல்கொடு தூவிக் * காலினால் பாய்ந்தனை என்று என்று *
 எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு * இவர் ஆர்? முறைப்படுகின்றார் **
 கண்ணனே வெள்ளறை நின்றாய் * கண்டாரொடே தீமை செய்வாய்!
 வண்ணமே வேலையது ஒப்பாய் * வள்ளலே காப்பிட வாராய் (4)

Pasuram 184 · corpus 196

Pasuram 184

Study resources at Uveda
பல்லாயிரவர் இவ் ஊரில் பிள்ளைகள் * தீமைகள் செய்வார் *
 எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது * எம்பிரான் நீ இங்கே வாராய் **
 நல்லார்கள் வெள்ளறை நின்றாய் * ஞானச் சுடரே உன்மேனி *
 சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச் * சொப்படக் காப்பிட வாராய் (5)

Pasuram 185 · corpus 197

Pasuram 185

Study resources at Uveda
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் * கரு நிறச் செம் மயிர்ப் பேயை *
 வஞ்சிப்பதற்கு விடுத்தான் * என்பது ஓர் வார்த்தையும் உண்டு **
 மஞ்சு தவழ் மணி மாட * மதிள் திருவெள்ளறை நின்றாய்!
 அஞ்சுவன் நீ அங்கு நிற்க * அழகனே காப்பிட வாராய் (6)

Pasuram 186 · corpus 198

Pasuram 186

Study resources at Uveda
கள்ளச் சகடும் மருதும் * கலக்கு அழிய உதைசெய்த *
 பிள்ளையரசே! * நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை **
 உள்ளவாறு ஒன்றும் அறியேன் * ஒளியுடை வெள்ளறை நின்றாய் *
 பள்ளிகொள் போது இது ஆகும் * பரமனே காப்பிட வாராய் (7)

Pasuram 187 · corpus 199

Pasuram 187

Study resources at Uveda
இன்பம் அதனை உயர்த்தாய் * இமையவர்க்கு என்றும் அரியாய் *
 கும்பக் களிறு அட்ட கோவே * கொடுங் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே **
 செம்பொன் மதில் வெள்ளறையாய்! * செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
 கம்பக் கபாலி காண் அங்கு * கடிது ஓடிக் காப்பிட வாராய் (8)

Pasuram 188 · corpus 200

Pasuram 188

Study resources at Uveda
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு * எழில் மறையோர் வந்து நின்றார் *
 தருக்கேல் நம்பி சந்தி நின்று * தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் **
 திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத் * தேசு உடை வெள்ளறை நின்றாய் *
 உருக் காட்டும் அந்தி விளக்கு * இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் (9)

Pasuram 189 · corpus 201

Pasuram 189

Study resources at Uveda
போது அமர் செல்வக்கொழுந்து * புணர் திருவெள்ளறையானை *
 மாதர்க்கு உயர்ந்த அசோதை * மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம் **
 வேதப் பயன் கொள்ள வல்ல * விட்டுசித்தன் சொன்ன மாலை *
 பாதப் பயன் கொள்ள வல்ல * பத்தர் உள்ளார் வினை போமே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.