Corpus pasurams 318–327

This page preserves the source-defined decade 3, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 306 · corpus 318

Pasuram 306

Study resources at Uveda
நெறிந்த கருங்குழல் மடவாய் * நின் அடியேன் விண்ணப்பம் *
 செறிந்த மணி முடிச் சனகன் * சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
 அறிந்து ** அரசு களைகட்ட * அருந்தவத்தோன் இடை விலங்க *
 செறிந்த சிலைகொடு தவத்தைச் * சிதைத்ததும் ஓர் அடையாளம் (1)

Pasuram 307 · corpus 319

Pasuram 307

Study resources at Uveda
அல்லியம்பூ மலர்க்கோதாய் * அடி பணிந்தேன் விண்ணப்பம் *
 சொல்லுகேன் கேட்டருளாய் * துணைமலர்க் கண் மடமானே ! **
 எல்லியம் போது இனி திருத்தல் * இருந்தது ஓர் இட வகையில் *
 மல்லிகை மா மாலை கொண்டு * அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)

Pasuram 308 · corpus 320

Pasuram 308

Study resources at Uveda
கலக்கிய மா மனத்தனளாய்க் * கைகேசி வரம் வேண்ட *
 மலக்கிய மா மனத்தனனாய் * மன்னவனும் மறாது ஒழிய **
 குலக்குமரா காடு உறையப் போ என்று * விடை கொடுப்ப *
 இலக்குமணன் தன்னொடும் * அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)

Pasuram 309 · corpus 321

Pasuram 309

Study resources at Uveda
வார் அணிந்த முலை மடவாய் * வைதேவீ விண்ணப்பம் *
 தேர் அணிந்த அயோத்தியர் கோன் * பெருந்தேவீ ! கேட்டருளாய் **
 கூர் அணிந்த வேல் வலவன் * குகனோடும் கங்கை தன்னில் *
 சீர் அணிந்த தோழமை * கொண்டதும் ஓர் அடையாளம் (4)

Pasuram 310 · corpus 322

Pasuram 310

Study resources at Uveda
மான் அமரும் மென்நோக்கி * வைதேவீ ! விண்ணப்பம் *
 கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த காலத்து **
 தேன் அமரும் பொழில் சாரல் * சித்திரகூடத்து இருப்ப *
 பால் மொழியாய் பரத நம்பி * பணிந்ததும் ஓர் அடையாளம் (5)

Pasuram 311 · corpus 323

Pasuram 311

Study resources at Uveda
சித்திரகூடத்து இருப்பச் * சிறுகாக்கை முலை தீண்ட *
 அத்திரமே கொண்டு எறிய * அனைத்து உலகும் திரிந்து ஓடி **
 வித்தகனே இராமாவோ * நின் அபயம் என்று அழைப்ப *
 அத்திரமே அதன் கண்ணை * அறுத்ததும் ஓர் அடையாளம் (6)

Pasuram 312 · corpus 324

Pasuram 312

Study resources at Uveda
மின் ஒத்த நுண் இடையாய் * மெய் அடியேன் விண்ணப்பம் *
 பொன் ஒத்த மான் ஒன்று * புகுந்து இனிது விளையாட **
 நின் அன்பின் வழிநின்று * சிலை பிடித்து எம்பிரான் ஏக *
 பின்னே அங்கு இலக்குமணன் * பிரிந்ததும் ஓர் அடையாளம் (7)

Pasuram 313 · corpus 325

Pasuram 313

Study resources at Uveda
மைத் தகு மா மலர்க்குழலாய் * வைதேவீ விண்ணப்பம் *
 ஒத்த புகழ் வானரக்கோன் * உடன் இருந்து நினைத் தேட **
 அத்தகு சீர் அயோத்தியர் கோன் * அடையாளம் இவை மொழிந்தான் *
 இத் தகையால் அடையாளம் * ஈது அவன் கை மோதிரமே (8)

Pasuram 314 · corpus 326

Pasuram 314

Study resources at Uveda
திக்கு நிறை புகழாளன் * தீ வேள்விச் சென்ற நாள் *
 மிக்க பெரும் சபை நடுவே * வில் இறுத்தான் மோதிரம் கண்டு **
 ஒக்குமால் அடையாளம் * அனுமான் என்று * உச்சிமேல்
 வைத்துக்கொண்டு உகந்தனளால் * மலர்க்குழலாள் சீதையுமே (9)

Pasuram 315 · corpus 327

Pasuram 315

Study resources at Uveda
வார் ஆரும் முலை மடவாள் * வைதேவி தனைக் கண்டு *
 சீர் ஆரும் திறல் அனுமன் * தெரிந்து உரைத்த அடையாளம் **
 பார் ஆரும் புகழ்ப் புதுவைப் * பட்டர்பிரான் பாடல் வல்லார் *
 ஏர் ஆரும் வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.