Corpus pasurams 328–337

This page preserves the source-defined decade 4, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 316 · corpus 328

Pasuram 316

Study resources at Uveda
கதிர் ஆயிரம் இரவி * கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன் *
 எதிர் இல் பெருமை இராமனை * இருக்கும் இடம் நாடுதிரேல் **
 அதிரும் கழல் பொரு தோள் * இரணியன் ஆகம் பிளந்து * அரியாய்
 உதிரம் அளைந்த கையோடு இருந்தானை * உள்ளவா கண்டார் உளர் (1)

Pasuram 317 · corpus 329

Pasuram 317

Study resources at Uveda
நாந்தகம் சங்கு தண்டு * நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம் *
 ஏந்து பெருமை இராமனை * இருக்கும் இடம் நாடுதிரேல் **
 காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகிக் * கடுஞ்சிலை சென்று இறுக்க *
 வேந்தர் தலைவன் சனகராசன் தன் * வேள்வியில் கண்டார் உளர் (2)

Pasuram 318 · corpus 330

Pasuram 318

Study resources at Uveda
கொலையானைக் கொம்பு பறித்துக் * கூடலர் சேனை பொருது அழியச் *
 சிலையால் மராமரம் எய்த தேவனைச் * சிக்கென நாடுதிரேல் **
 தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று * தடவரை கொண்டு அடைப்ப *
 அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை * அங்குத்தைக் கண்டார் உளர் (3)

Pasuram 319 · corpus 331

Pasuram 319

Study resources at Uveda
தோயம் பரந்த நடுவு சூழலில் * தொல்லை வடிவு கொண்ட *
 மாயக் குழவி யதனை நாடுறில் * வம்மின் சுவடு உரைக்கேன் **
 ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி * அடல் விடை ஏழினையும் *
 வீயப் பொருது வியர்த்து நின்றானை * மெய்ம்மையே கண்டார் உளர் (4)

Pasuram 320 · corpus 332

Pasuram 320

Study resources at Uveda
நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் * நான்முகனும் முறையால் *
 சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற * திருமாலை நாடுதிரேல் **
 வார் ஏறு கொங்கை உருப்பிணியை * வலியப் பிடித்துக்கொண்டு
 தேர் ஏற்றி * சேனை நடுவு போர் செய்யச் * சிக்கெனக் கண்டார் உளர் (5)

Pasuram 321 · corpus 333

Pasuram 321

Study resources at Uveda
பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் * புணர்முலை வாய்மடுக்க
 வல்லானை * மா மணிவண்ணனை * மருவும் இடம் நாடுதிரேல் **
 பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு * பௌவம் எறி துவரை *
 எல்லாரும் சூழச் சிங்காசனத்தே * இருந்தானைக் கண்டார் உளர் (6)

Pasuram 322 · corpus 334

Pasuram 322

Study resources at Uveda
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் * ஏந்து கையன் *
 உள்ள இடம் வினவில் * உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் **
 வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் * தேர்மிசை முன்பு நின்று *
 கள்ளப் படைத்துணை ஆகிப் * பாரதம் கைசெய்யக் கண்டார் உளர் (7)

Pasuram 323 · corpus 335

Pasuram 323

Study resources at Uveda
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற * அரசர்கள் தம் முகப்பே *
 நாழிகை போகப் படை பொருதவன் * தேவகி தன் சிறுவன் **
 ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் * சயத்திரதன் தலையை *
 பாழில் உருளப் படை பொருதவன் * பக்கமே கண்டார் உளர் (8)

Pasuram 324 · corpus 336

Pasuram 324

Study resources at Uveda
மண்ணும் மலையும் மறிகடல்களும் * மற்றும் யாவும் எல்லாம் *
 திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் * சிக்கென நாடுதிரேல் **
 எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி * இருநிலம் புக்கு இடந்து *
 வண்ணக் கருங்குழல் மாதரோடு * மணந்தானைக் கண்டார் உளர் (9)

Pasuram 325 · corpus 337

Pasuram 325

Study resources at Uveda
கரிய முகில் புரை மேனி மாயனைக் * கண்ட சுவடு உரைத்து *
 புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி * விளை கழனிப் புதுவை **
 திருவில் பொலி மறைவாணன் * பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் *
 பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் * பரமன் அடி சேர்வர்களே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.