Corpus pasurams 307–317

This page preserves the source-defined decade 3, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 295 · corpus 307

Pasuram 295

Study resources at Uveda
என் நாதன் தேவிக்கு * அன்று இன்பப்பூ ஈயாதாள் *
 தன் நாதன் காணவே * தண்பூ மரத்தினை **
 வன் நாதப் புள்ளால் * வலியப் பறித்திட்ட *
 என் நாதன் வன்மையைப் பாடிப் பற * எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1)

Pasuram 296 · corpus 308

Pasuram 296

Study resources at Uveda
என் வில் வலி கண்டு * போ என்று எதிர் வந்தான்
 தன் * வில்லினோடும் * தவத்தை எதிர்வாங்கி **
 முன் வில் வலித்து * முதுபெண் உயிருண்டான்
 தன் * வில்லின் வன்மையைப் பாடிப் பற * தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)

Pasuram 297 · corpus 309

Pasuram 297

Study resources at Uveda
உருப்பிணி நங்கையைத் * தேர் ஏற்றிக் கொண்டு *
 விருப்புற்று அங்கு ஏக * விரைந்து எதிர் வந்து **
 செருக்கு உற்றான் * வீரம் சிதைய * தலையைச்
 சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற * தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)

Pasuram 298 · corpus 310

Pasuram 298

Study resources at Uveda
மாற்றுத்தாய் சென்று * வனம்போகே என்றிட *
 ஈற்றுத்தாய் பின் தொடர்ந்து * எம்பிரான் என்று அழ **
 கூற்றுத் தாய் சொல்லக் * கொடிய வனம் போன *
 சீற்றம் இலாதானைப் பாடிப் பற * சீதை மணாளனைப் பாடிப் பற (4)

Pasuram 299 · corpus 311

Pasuram 299

Study resources at Uveda
பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
 நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நற்பொய்கை புக்கு **
 அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள் செய்த *
 அஞ்சன வண்ணனைப் பாடிப் பற * அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற (5)

Pasuram 300 · corpus 312

Pasuram 300

Study resources at Uveda
முடி ஒன்றி * மூவுலகங்களும் ஆண்டு * உன்
 அடியேற்கு அருள் என்று * அவன் பின் தொடர்ந்த **
 படியில் குணத்துப் * பரத நம்பிக்கு * அன்று
 அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற * அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)

Pasuram 301 · corpus 313

Pasuram 301

Study resources at Uveda
காளியன் பொய்கை * கலங்கப் பாய்ந்திட்டு * அவன்
 நீள்முடி ஐந்திலும் * நின்று நடம்செய்து **
 மீள அவனுக்கு * அருள்செய்த வித்தகன் *
 தோள் வலி வீரமே பாடிப் பற * தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)

Pasuram 302 · corpus 314

Pasuram 302

Study resources at Uveda
தார்க்கு இளந்தம்பிக்கு * அரசு ஈந்து * தண்டகம்
 நூற்றவள் சொற்கொண்டு போகி * நுடங்கு இடைச்
 சூர்ப்பணகாவைச் * செவியொடு மூக்கு * அவள்
 ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற * அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)

Pasuram 303 · corpus 315

Pasuram 303

Study resources at Uveda
மாயச் சகடம் உதைத்து * மருது இறுத்து *
 ஆயர்களோடு போய் * ஆநிரை காத்து ** அணி
 வேயின் குழல் ஊதி * வித்தகனாய் நின்ற *
 ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற * ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9)

Pasuram 304 · corpus 316

Pasuram 304

Study resources at Uveda
காரார் கடலை அடைத்திட்டு * இலங்கை புக்கு *
 ஓராதான் பொன்முடி * ஒன்பதோடு ஒன்றையும் **
 நேரா அவன்தம்பிக்கே * நீள் அரசு ஈந்த *
 ஆராவமுதனைப் பாடிப் பற * அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)

Pasuram 305 · corpus 317

Pasuram 305

Study resources at Uveda
நந்தன் மதலையைக் * காகுத்தனை நவின்று *
 உந்தி பறந்த * ஒளியிழையார்கள் சொல் **
 செந்தமிழ்த் தென்புதுவை * விட்டு சித்தன் சொல் *
 ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு * அல்லல் இல்லையே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.