Pasuram 222 · corpus 234
Pasuram 222
அஞ்சன வண்ணனை * ஆயர் கோலக் கொழுந்தினை *
மஞ்சனம் ஆட்டி * மனைகள்தோறும் திரியாமே **
கஞ்சனைக் காய்ந்த * கழல் அடி நோவக் கன்றின்பின் *
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (1)
Periyalvar · Pasurams 222–231
Corpus pasurams 234–243
This page preserves the source-defined decade 3, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 222 · corpus 234
அஞ்சன வண்ணனை * ஆயர் கோலக் கொழுந்தினை *
மஞ்சனம் ஆட்டி * மனைகள்தோறும் திரியாமே **
கஞ்சனைக் காய்ந்த * கழல் அடி நோவக் கன்றின்பின் *
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (1)
Pasuram 223 · corpus 235
பற்றுமஞ்சள் பூசிப் * பாவைமாரொடு பாடியில் *
சிற்றில் சிதைத்து எங்கும் * தீமை செய்து திரியாமே **
கற்றுத் தூளியுடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (2)
Pasuram 224 · corpus 236
நன்மணி மேகலை * நங்கைமாரொடு நாள்தொறும் *
பொன்மணி மேனி * புழுதியாடித் திரியாமே **
கல்மணி நின்று அதிர் * கான் அதரிடைக் கன்றின்பின் *
என் மணிவண்ணனைப் போக்கினேன் * எல்லே பாவமே (3)
Pasuram 225 · corpus 237
வண்ணக் கருங்குழல் * மாதர் வந்து அலர் தூற்றிடப் *
பண்ணிப் பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கண்ணுக்கு இனியானைக் * கான் அதரிடைக் கன்றின்பின் *
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் * எல்லே பாவமே (4)
Pasuram 226 · corpus 238
அவ்வவ் இடம் புக்கு * அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் *
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் * கூழைமை செய்யாமே **
எவ்வும் சிலை உடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
தெய்வத் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (5)
Pasuram 227 · corpus 239
மிடறு மெழுமெழுத்து ஓட * வெண்ணெய் விழுங்கிப் போய் *
படிறு பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கடிறு பல திரி * கான் அதரிடைக் கன்றின் பின் *
இடற என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (6)
Pasuram 228 · corpus 240
வள்ளி நுடங்கு இடை * மாதர் வந்து அலர் தூற்றிட *
துள்ளி விளையாடித் * தோழரோடு திரியாமே **
கள்ளி உணங்கு * வெங்கான் அதரிடைக் கன்றின் பின் *
புள்ளின் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (7)
Pasuram 229 · corpus 241
பன்னிரு திங்கள் * வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் *
என் இளங் கொங்கை * அமுதம் ஊட்டி எடுத்து யான் **
பொன்னடி நோவப் * புலரியே கானில் கன்றின் பின் *
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் * எல்லே பாவமே (8)
Pasuram 230 · corpus 242
குடையும் செருப்பும் கொடாதே * தாமோதரனை நான் *
உடையும் கடியன * ஊன்று வெம் பரற்கள் உடை **
கடிய வெங் கானிடைக் * கால் அடி நோவக் கன்றின் பின் *
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (9)
Pasuram 231 · corpus 243
என்றும் எனக்கு இனியானை * என் மணிவண்ணனை *
கன்றின் பின் போக்கினேன் என்று * அசோதை கழறிய **
பொன் திகழ் மாடப் * புதுவையர்கோன் பட்டன் சொல் *
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு * இடர் இல்லையே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.