Corpus pasurams 244–253

This page preserves the source-defined decade 3, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 232 · corpus 244

Pasuram 232

Study resources at Uveda
சீலைக் குதம்பை ஒருகாது * ஒருகாது செந்நிற மேல் தோன்றிப்பூ *
 கோலப் பணைக் கச்சும் கூறை உடையும் * குளிர் முத்தின் கோடாலமும் **
 காலிப் பின்னே வருகின்ற * கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர் *
 ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் * நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை (1)

Pasuram 233 · corpus 245

Pasuram 233

Study resources at Uveda
கன்னி நன் மா மதிள் சூழ்தரு * பூம்பொழில் காவிரித் தென்னரங்கம் *
 மன்னிய சீர் மதுசூதனா கேசவா * பாவியேன் வாழ்வு உகந்து **
 உன்னை இளங்கன்று மேய்க்கச் * சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் *
 என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை * என்குட்டனே முத்தம் தா (2)

Pasuram 234 · corpus 246

Pasuram 234

Study resources at Uveda
காடுகள் ஊடு போய்க் * கன்றுகள் மேய்த்து மறியோடிக் * கார்க்கோடற்பூச்
 சூடி வருகின்ற தாமோதரா * கற்றுத் தூளி காண் உன் உடம்பு **
 பேடை மயில் சாயல் பின்னை மணாளா * நீராட்டு அமைத்து வைத்தேன் *
 ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் * உன்னோடு உடனே உண்பான் (3)

Pasuram 235 · corpus 247

Pasuram 235

Study resources at Uveda
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா * கரும் போரேறே * நீ உகக்கும்
 குடையும் செருப்பும் குழலும் * தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே **
 கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன * சிறுக்குட்டச் செங் கமல *
 அடியும் வெதும்பி * உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் (4)

Pasuram 236 · corpus 248

Pasuram 236

Study resources at Uveda
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை * வாய்வைத்த போரேறே * என்
 சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா * சிறுக்குட்டச் செங்கண் மாலே **
 சிற்றாடையும் சிறுப்பத்திரமும் * இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் *
 கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் * கலந்து உடன் வந்தாய் போலும் (5)

Pasuram 237 · corpus 249

Pasuram 237

Study resources at Uveda
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா * நீ பொய்கை புக்கு *
 நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் * நான் உயிர் வாழ்ந்திருந்தேன் **
 என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்? * ஏதும் ஓர் அச்சம் இல்லை *
 கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் * காயாம்பூ வண்ணம் கொண்டாய் (6)

Pasuram 238 · corpus 250

Pasuram 238

Study resources at Uveda
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய * பாற்கடல் வண்ணா உன்மேல் *
 கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த * கள்ள அசுரர் தம்மை **
 சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே * விளங்காய் எறிந்தாய் போலும் *
 என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் * அங்ஙனம் ஆவர்களே (7)

Pasuram 239 · corpus 251

Pasuram 239

Study resources at Uveda
கேட்டு அறியாதன கேட்கின்றேன் * கேசவா கோவலர் இந்திரற்கு *
 காட்டிய சோறும் கறியும் தயிரும் * கலந்து உடன் உண்டாய் போலும் **
 ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு * ஒருபோதும் எனக்கு அரிது *
 வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா * உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் (8)

Pasuram 240 · corpus 252

Pasuram 240

Study resources at Uveda
திண் ஆர் வெண் சங்கு உடையாய் * திருநாள் திருவோணம் இன்று எழு நாள்; * முன்
 பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப் * பல்லாண்டு கூறுவித்தேன் **
 கண்ணாலம் செய்யக் * கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன் *
 கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல் * கோலம் செய்து இங்கே இரு (9)

Pasuram 241 · corpus 253

Pasuram 241

Study resources at Uveda
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி * தன் புத்திரன் கோவிந்தனை *
 கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து * அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் **
 செற்றம் இலாதவர் வாழ்தரு * தென் புதுவை விட்டுசித்தன் சொல் *
 கற்று இவை பாட வல்லார் * கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.