Corpus pasurams 254–263

This page preserves the source-defined decade 3, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 242 · corpus 254

Pasuram 242

Study resources at Uveda
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் * தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி *
 குழல்களும் கீதமும் ஆகி எங்கும் * கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு **
 மழை கொலோ வருகின்றது என்று சொல்லி * மங்கைமார் சாலக வாசல் பற்றி *
 நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் * உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே (1)

Pasuram 243 · corpus 255

Pasuram 243

Study resources at Uveda
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு * வசை அறத் திருவரை விரித்து உடுத்து *
 பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி * பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே **
 முல்லை நல் நறுமலர் வேங்கை மலர் அணிந்து * பல் ஆயர் குழாம் நடுவே *
 எல்லியம் போதாகப் பிள்ளை வரும் * எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே (2)

Pasuram 244 · corpus 256

Pasuram 244

Study resources at Uveda
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் * மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட *
 ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி * ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் **
 வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் * மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் *
 அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள் * அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே (3)

Pasuram 245 · corpus 257

Pasuram 245

Study resources at Uveda
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் * கோவலனாய்க் குழல் ஊதி ஊதி *
 கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு * கலந்து உடன் வருவானைத் தெருவில் கண்டு **
 என்றும் இவனை ஒப்பாரை நங்காய் * கண்டறியேன் ஏடி வந்து காணாய் *
 ஒன்றும் நில்லா வளை கழன்று * துகில் ஏந்து இள முலையும் என் வசம் அல்லவே (4)

Pasuram 246 · corpus 258

Pasuram 246

Study resources at Uveda
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச் * சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து *
 பற்றி நின்று ஆயர் கடைத்தலையே * பாடவும் ஆடக் கண்டேன் ** அன்றிப் பின்
 மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன் * மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் *
 கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் * கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே (5)

Pasuram 247 · corpus 259

Pasuram 247

Study resources at Uveda
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றி மேல் * திருத்திய கோறம்பும் திருக்குழலும் *
 அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ் * வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச **
 அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை * அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில் *
 பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப் * பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6)

Pasuram 248 · corpus 260

Pasuram 248

Study resources at Uveda
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த் * தன் திருமேனி நின்று ஒளி திகழ *
 நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து * பல் ஆயர் குழாம் நடுவே **
 கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் * குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து * ஆயரோடு
 ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை * அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே (7)

Pasuram 249 · corpus 261

Pasuram 249

Study resources at Uveda
சிந்துரப் பொடி கொண்டு சென்னி அப்பித் * திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால் *
 அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை * அழகிய நேத்திரத்தால் அணிந்து **
 இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை * எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன *
 சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் * துகிலொடு சரிவளை கழல்கின்றதே (8)

Pasuram 250 · corpus 262

Pasuram 250

Study resources at Uveda
வலங் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து * மல்லிகை வனமாலை மௌவல் மாலை *
 சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத் * தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி **
 அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை * அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு *
 விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் * வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே (9)

Pasuram 251 · corpus 263

Pasuram 251

Study resources at Uveda
விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ * மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே *
 கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு * இளஆய்க் கன்னிமார் காமுற்ற
 வண்ணம் ** வண்டு அமர் பொழிற் புதுவையர் கோன் * விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் *
 பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் * பரமான வைகுந்தம் நண்ணுவரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.