This page preserves the source-defined decade 3, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நாவலம் பெரிய தீவினில் வாழும் * நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர் *
தூ வலம்புரி உடைய திருமால் * தூய வாயில் குழல் ஓசை வழியே **
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப * உடல் உள் அவிழ்ந்து * எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலை ஆகி * வந்து கவிழ்ந்து நின்றனரே (1)
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் * வாசுதேவன் மதுரைமன்னன் * நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன் * கோவிந்தன் குழல்கொடு ஊதின போது **
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி * மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்ப *
தேன் அளவு செறி கூந்தல் அவிழச் * சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3)
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் * தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி *
கானகம் படி உலாவி உலாவிக் * கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது **
மேனகையொடு திலோத்தமை அரம்பை * உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி *
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி * ஆடல் பாடல் இவை மாறினர் தாமே (4)
முன் நரசிங்கமது ஆகி * அவுணன் முக்கியத்தை முடிப்பான் * மூவுலகில்
மன்னர் அஞ்ச * மதுசூதனன் வாயில் குழலின் ஓசை * செவியைப் பற்றி வாங்க **
நன் நரம்பு உடைய தும்புருவோடு * நாரதனும் தம் தம் வீணை மறந்து *
கின்னர மிதுனங்களும் தம் தம் * கின்னரம் தொடுகிலோம் என்றனரே (5)
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர் * பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் * நாகத்து அணையான் குழல் ஊத * அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப **
அவியுணா மறந்து வானவர் எல்லாம் * ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி *
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து * கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே (7)
கருங்கண் தோகை மயில் பீலி அணிந்து * கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை *
அருங்கல உருவின் ஆயர் பெருமான் * அவனொருவன் குழல் ஊதின போது **
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் * மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் *
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி * அவை செய்யும் குணமே (10)