Corpus pasurams 286–296

This page preserves the source-defined decade 3, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 274 · corpus 286

Pasuram 274

Study resources at Uveda
ஐய புழுதி உடம்பு அளைந்து * இவள் பேச்சும் அலந்தலையாய் *
 செய்ய நூலின் சிற்றாடை * செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் **
 கையினில் சிறுதூதை யோடு * இவள் முற்றில் பிரிந்தும் இலள் *
 பை அரவணைப் பள்ளியானொடு * கைவைத்து இவள்வருமே (1)

Pasuram 275 · corpus 287

Pasuram 275

Study resources at Uveda
வாயில் பல்லும் எழுந்தில * மயிரும் முடி கூடிற்றில *
 சாய்வு இலாத குறுந்தலைச் * சில பிள்ளைகளோடு இணங்கி **
 தீ இணக்கு இணங்கு ஆடி வந்து * இவள் தன் அன்ன செம்மை சொல்லி *
 மாயன் மா மணிவண்ணன் மேல் * இவள் மால் உறுகின்றாளே (2)

Pasuram 276 · corpus 288

Pasuram 276

Study resources at Uveda
பொங்கு வெண்மணல் கொண்டு * சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் *
 சங்கு சக்கரம் தண்டு வாள் * வில்லும் அல்லது இழைக்கலுறாள் **
 கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில * கோவிந்தனோடு இவளை *
 சங்கை யாகி என் உள்ளம் * நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே (3)

Pasuram 277 · corpus 289

Pasuram 277

Study resources at Uveda
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து * என் பெண்மகளை எள்கி *
 தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த * சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் **
 ஆழியான் என்னும் ஆழ மோழையில் * பாய்ச்சி அகப்படுத்தி *
 மூழை உப்பு அறியாது என்னும் * மூதுரையும் இலளே (4)

Pasuram 278 · corpus 290

Pasuram 278

Study resources at Uveda
நாடும் ஊரும் அறியவே போய் * நல்ல துழாய் அலங்கல்
 சூடி * நாரணன் போம் இடம் எல்லாம் * சோதித்து உழி தருகின்றாள் **
 கேடு வேண்டுகின்றார் பலர் உளர் * கேசவனோடு இவளை *
 பாடிகாவல் இடுமின் என்று என்று * பார் தடுமாறினதே (5)

Pasuram 279 · corpus 291

Pasuram 279

Study resources at Uveda
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து * இவள் பாடகமும் சிலம்பும் *
 இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு * என்னோடு இருக்கலுறாள் **
 பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று * இவள் பூவைப் பூவண்ணா என்னும் *
 வட்ட வார் குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே (6)

Pasuram 280 · corpus 292

Pasuram 280

Study resources at Uveda
பேசவும் தரியாத பெண்மையின் * பேதையேன் பேதை இவள் *
 கூசமின்றி நின்றார்கள் * தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் **
 கேசவா என்றும் கேடிலீ என்றும் * கிஞ்சுக வாய் மொழியாள் *
 வாச வார்குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே 7

Pasuram 281 · corpus 293

Pasuram 281

Study resources at Uveda
காறை பூணும் கண்ணாடி காணும் * தன் கையில் வளை குலுக்கும் *
 கூறை உடுக்கும் அயர்க்கும் * தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் **
 தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் * தேவன் திறம் பிதற்றும் *
 மாறில் மா மணிவண்ணன்மேல் * இவள் மால் உறுகின்றாளே (8)

Pasuram 282 · corpus 294

Pasuram 282

Study resources at Uveda
கைத்தலத்து உள்ள மாடு அழியக் * கண்ணாலங்கள் செய்து * இவளை
 வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? * நம்மை வடுப்படுத்தும் **
 செய்த்தலை எழு நாற்றுப் போல் * அவன் செய்வன செய்துகொள்ள *
 மைத் தடமுகில் வண்ணன் பக்கல் * வளர விடுமின்களே (9)

Pasuram 283 · corpus 295

Pasuram 283

Study resources at Uveda
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து * பேணி நம் இல்லத்துள்ளே *
 இருத்துவான் எண்ணி நாம் இருக்க * இவளும் ஒன்று எண்ணுகின்றாள் **
 மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் * வார்த்தை படுவதன்முன் *
 ஒருப்படுத்து இடுமின் இவளை * உலகளந்தான் இடைக்கே (10)

Pasuram 284 · corpus 296

Pasuram 284

Study resources at Uveda
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் * நாராயணனுக்கு * இவள்
 மாலதாகி மகிழ்ந்தனள் என்று * தாய் உரை செய்ததனை **
 கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் * விட்டுசித்தன் சொன்ன *
 மாலை பத்தும் வல்லவர்கட்கு * இல்லை வரு துயரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.