Corpus pasurams 297–306

This page preserves the source-defined decade 3, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 285 · corpus 297

Pasuram 285

Study resources at Uveda
நல்லது ஓர் தாமரைப் பொய்கை * நாண்மலர் மேல் பனி சோர *
 அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு * அழகழிந்தால் ஒத்ததாலோ **
 இல்லம் வெறியோடிற்றாலோ ! * என்மகளை எங்கும் காணேன் *
 மல்லரை அட்டவன் பின்போய் * மதுரைப் புறம் புக்காள் கொலோ? (1)

Pasuram 286 · corpus 298

Pasuram 286

Study resources at Uveda
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத * உருவறைக் கோபாலர் தங்கள் *
 கன்று கால் மாறுமா போலே * கன்னி இருந்தாளைக் கொண்டு **
 நன்றும் கிறி செய்து போனான் * நாராயணன் செய்த தீமை *
 என்றும் எமர்கள் குடிக்கு * ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொலோ? (2)

Pasuram 287 · corpus 299

Pasuram 287

Study resources at Uveda
குமரி மணம் செய்து கொண்டு * கோலம் செய்து இல்லத்து இருத்தி *
 தமரும் பிறரும் அறியத் * தாமோதரற்கு என்று சாற்றி **
 அமரர் பதியுடைத் தேவி * அரசாணியை வழிபட்டு *
 துமிலம் எழப் பறை கொட்டித் * தோரணம் நாட்டிடுங் கொலோ? (3)

Pasuram 288 · corpus 300

Pasuram 288

Study resources at Uveda
ஒரு மகள் தன்னை உடையேன் * உலகம் நிறைந்த புகழால் *
 திருமகள் போல வளர்த்தேன் * செங்கண் மால் தான் கொண்டு போனான் **
 பெரு மகளாய்க் குடி வாழ்ந்து * பெரும்பிள்ளை பெற்ற அசோதை *
 மருமகளைக் கண்டு உகந்து * மணாட்டுப் புறம்செய்யுங் கொலோ? (4)

Pasuram 289 · corpus 301

Pasuram 289

Study resources at Uveda
தம் மாமன் நந்தகோபாலன் * தழீஇக் கொண்டு என் மகள் தன்னை *
 செம்மாந்திரே என்று சொல்லி * செழுங் கயல் கண்ணும் செவ்வாயும் **
 கொம்மை முலையும் இடையும் * கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு *
 இம் மகளைப் பெற்ற தாயர் * இனித் தரியார் என்னுங் கொலோ? (5)

Pasuram 290 · corpus 302

Pasuram 290

Study resources at Uveda
வேடர் மறக்குலம் போலே * வேண்டிற்றுச் செய்து என்மகளை *
 கூடிய கூட்டமே யாகக் * கொண்டு குடி வாழுங் கொலோ? **
 நாடு நகரும் அறிய * நல்லது ஓர் கண்ணாலம் செய்து *
 சாடு இறப் பாய்ந்த பெருமான் * தக்கவா கைப்பற்றுங் கொலோ? (6)

Pasuram 291 · corpus 303

Pasuram 291

Study resources at Uveda
அண்டத்து அமரர் பெருமான் * ஆழியான் இன்று என்மகளை *
 பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் * பரிசு அற ஆண்டிடுங் கொலோ? **
 கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து * கோவலப் பட்டம் கவித்து *
 பண்டை மணாட்டிமார் முன்னே * பாதுகாவல் வைக்குங் கொலோ? (7)

Pasuram 292 · corpus 304

Pasuram 292

Study resources at Uveda
குடியில் பிறந்தவர் செய்யும் * குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ *
 நடை ஒன்றும் செய்திலன் நங்காய் * நந்தகோபன் மகன் கண்ணன் **
 இடை இருபாலும் வணங்க * இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி *
 கடைகயிறே பற்றி வாங்கிக் * கை தழும்பு ஏறிடுங் கொலோ? (8)

Pasuram 293 · corpus 305

Pasuram 293

Study resources at Uveda
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை * வெள்வரைப்பின் முன் எழுந்து *
 கண் உறங்காதே இருந்து * கடையவும் தான்வல்லள் கொலோ? **
 ஒண்ணிறத் தாமரைச் செங்கண் * உலகளந்தான் என்மகளை *
 பண் அறையாப் பணிகொண்டு * பரிசு அற ஆண்டிடுங் கொலோ? (9)

Pasuram 294 · corpus 306

Pasuram 294

Study resources at Uveda
மாயவன் பின்வழி சென்று * வழியிடை மாற்றங்கள் கேட்டு *
 ஆயர்கள் சேரியிலும் புக்கு * அங்குத்தை மாற்றமும் எல்லாம் **
 தாயவள் சொல்லிய சொல்லைப் * தண் புதுவைப் பட்டன் சொன்ன *
 தூய தமிழ் பத்தும் வல்லார் * தூ மணிவண்ணனுக்கு ஆளரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.