Corpus pasurams 423–432

This page preserves the source-defined decade 4, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 411 · corpus 423

Pasuram 411

Study resources at Uveda
துப்புடையாரை அடைவது எல்லாம் * சோர்விடத்துத் துணை ஆவர் என்றே *
 ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் * ஆனைக்கு நீ அருள் செய்தமையால் **
 எய்ப்பு என்னை வந்து நலியும்போது * அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் *
 அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)

Pasuram 412 · corpus 424

Pasuram 412

Study resources at Uveda
சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் * சங்கொடு சக்கரம் ஏந்தினானே *
 நா மடித்து என்னை அனேக தண்டம் * செய்வதா நிற்பர் நமன்தமர்கள் **
 போம் இடத்து உன்திறத்து எத்தனையும் * புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *
 ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)

Pasuram 413 · corpus 425

Pasuram 413

Study resources at Uveda
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் * எற்றி நமன் தமர் பற்றும்போது *
 நில்லுமின் என்னும் உபாயம் இல்லை * நேமியும் சங்கமும் ஏந்தினானே **
 சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் * சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
 அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)

Pasuram 414 · corpus 426

Pasuram 414

Study resources at Uveda
ஒற்றை விடையனும் நான்முகனும் * உன்னை அறியாப் பெருமையோனே! *
 முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி * மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ! **
 அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி * அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற *
 அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)

Pasuram 415 · corpus 427

Pasuram 415

Study resources at Uveda
பை அரவின் அணைப் பாற்கடலுள் * பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி! *
 உய்ய உலகு படைக்க வேண்டி * உந்தியில் தோற்றினாய் நான்முகனை **
 வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் * காலனையும் உடனே படைத்தாய் *
 ஐய இனி என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)

Pasuram 416 · corpus 428

Pasuram 416

Study resources at Uveda
தண்ணனவு இல்லை நமன்தமர்கள் * சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர் *
 மண்ணொடு நீரும் எரியும் காலும் * மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் **
 எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் * எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
 அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)

Pasuram 417 · corpus 429

Pasuram 417

Study resources at Uveda
செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற * தேவர்கள் நாயகனே எம்மானே *
 எஞ்சலில் என்னுடை இன் அமுதே * ஏழ் உலகும் உடையாய் என் அப்பா **
 வஞ்ச உருவின் நமன்தமர்கள் * வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது *
 அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)

Pasuram 418 · corpus 430

Pasuram 418

Study resources at Uveda
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் * நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த
 ஊனே புகே என்று மோதும்போது * அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் **
 வான் ஏய் வானவர் தங்கள் ஈசா * மதுரைப் பிறந்த மா மாயனே * என்
 ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)

Pasuram 419 · corpus 431

Pasuram 419

Study resources at Uveda
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா * கோநிரை மேய்த்தவனே எம்மானே *
 அன்று முதல் இன்று அறுதியாக * ஆதி அஞ் சோதி மறந்து அறியேன் **
 நன்றும் கொடிய நமன்தமர்கள் * நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது *
 அன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)

Pasuram 420 · corpus 432

Pasuram 420

Study resources at Uveda
மாயவனை மதுசூதனனை * மாதவனை மறையோர்கள் ஏத்தும் *
 ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை * அரங்கத்து அரவணைப் பள்ளியானை **
 வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் * விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் *
 தூய மனத்தினர் ஆகி வல்லார் * தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.