This page preserves the source-defined decade 4, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மரவடியைத் தம்பிக்கு * வான்பணையம் வைத்துப்போய் * வானோர் வாழ *
செரு உடைய திசைக்கருமம் * திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில் **
திருவடிதன் திருஉருவும் * திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று *
உரு உடைய மலர்நீலம் * காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1)
தன் அடியார் திறத்தகத்துத் * தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் *
என் அடியார் அது செய்யார் * செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் **
மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த *
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் * மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)
கருள் உடைய பொழில் மருதும் * கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *
உருள் உடைய சகடரையும் மல்லரையும் * உடைய விட்டு ஓசை கேட்டான் **
இருள் அகற்றும் எறி கதிரோன் * மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி *
அருள் கொடுத்திட்டு அடியவரை * ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3)
குறள் பிரமசாரியாய் * மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி *
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை * கொடுத்து உகந்த எம்மான் கோயில் **
எறிப்பு உடைய மணிவரைமேல் * இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின் வாய்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் * செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7)
உரம் பற்றி இரணியனை * உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி *
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க * வாய் அலரத் தெழித்தான் கோயில் **
உரம் பெற்ற மலர்க்கமலம் * உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் * தாள்சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே (8)
தேவு உடைய மீனமாய் ஆமையாய் * ஏனமாய் அரியாய்க் குறளாய் *
மூ உருவில் இராமனாய்க் * கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் **
சேவலொடு பெடை அன்னம் * செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடி *
பூ அணை மேல் துதைந்து எழு * செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9)
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் * செருச்செய்யும் நாந்தகம் என்னும் *
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் * விழுக்கை யாளன் **
இரவு ஆளன் பகலாளன் என்னையாளன் * ஏழு உலகப் பெரும் புரவாளன் *
திருவாளன் இனிதாகத் * திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10)
கைந்நாகத்து இடர் கடிந்த * கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் *
தென்நாடும் வடநாடும் தொழ நின்ற * திருவரங்கத் திருப்பதியின் மேல் **
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் * விரித்த தமிழ் உரைக்க வல்லார் *
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் * இணை பிரியாது இருப்பர் தாமே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.