This page preserves the source-defined decade 5, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வாக்குத் தூய்மை இலாமையினாலே * மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் *
நாக்கு நின்னை அல்லால் அறியாது * நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று **
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று * முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் *
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் * காரணா கருளக் கொடியானே! (1)
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் * சங்கு சக்கரம் ஏந்து கையானே! *
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் * பொறுப்பது பெரியோர் கடன் அன்றே **
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் * வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது *
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் * ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே (2)
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் * நாரணா என்னும் இத்தனை அல்லால் *
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் * புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே! **
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் * ஓவாதே நமோ நாரணா! என்பன் *
வன்மை ஆவது உன் கோயிலில் வாழும் * வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே (3)
நெடுமையால் உலகேழும் அளந்தாய் * நின்மலா நெடியாய் அடியேனைக் *
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா * கூறை சோறு இவை வேண்டுவதில்லை **
அடிமை என்னும் அக் கோயின்மையாலே * அங்கங்கே அவை போதரும் கண்டாய் *
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை * கோத்த வன் தளை கோள் விடுத்தானே! (4)
தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை * துடவையும் கிணறும் இவை எல்லாம் *
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே * வளைப்பு அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன் **
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது * நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி *
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே * குஞ்சரம் வீழக் கொம்பு ஒசித்தானே (5)
கண்ணா நான்முகனைப் படைத்தானே! * காரணா கரியாய் அடியேன் நான் *
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை * ஓவாதே நமோ நாரணா என்று **
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம வேத * நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறுமாகில் * அன்று எனக்கு அவை பட்டினி நாளே (6)