Corpus pasurams 349–359

This page preserves the source-defined decade 4, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 337 · corpus 349

Pasuram 337

Study resources at Uveda
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் * தொடர்ந்து ஓடிச் சென்ற *
 உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு * உறைத்திட்ட உறைப்பன் மலை **
 பொருப்பிடைக் கொன்றை நின்று * முறி ஆழியும் காசும் கொண்டு *
 விருப்பொடு பொன் வழங்கும் * வியன் மாலிருஞ் சோலையதே (1)

Pasuram 338 · corpus 350

Pasuram 338

Study resources at Uveda
கஞ்சனும் காளியனும் * களிறும் மருதும் எருதும் *
 வஞ்சனையில் மடிய * வளர்ந்த மணிவண்ணன் மலை **
 நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி * நளிர் மா மதியைச் *
 செஞ்சுடர் நா வளைக்கும் * திருமாலிருஞ் சோலையதே (2)

Pasuram 339 · corpus 351

Pasuram 339

Study resources at Uveda
மன்னு நரகன் தன்னைச் * சூழ் போகி வளைத்து எறிந்து *
 கன்னி மகளிர் தம்மைக் * கவர்ந்த கடல்வண்ணன் மலை **
 புன்னை செருந்தியொடு * புன வேங்கையும் கோங்கும் நின்று *
 பொன்அரி மாலைகள் சூழ் * பொழில் மாலிருஞ் சோலையதே (3)

Pasuram 340 · corpus 352

Pasuram 340

Study resources at Uveda
மாவலி தன்னுடைய * மகன் வாணன் மகள் இருந்த *
 காவலைக் கட்டழித்த * தனிக் காளை கருதும் மலை **
 கோவலர் கோவிந்தனைக் * குற மாதர்கள் பண் குறிஞ்சிப் *
 பா ஒலி பாடி நடம் பயில் * மாலிருஞ் சோலையதே (4)

Pasuram 341 · corpus 353

Pasuram 341

Study resources at Uveda
பல பல நாழம் சொல்லிப் * பழித்த சிசுபாலன் தன்னை *
 அலை வலைமை தவிர்த்த * அழகன் அலங்காரன் மலை **
 குல மலை கோல மலை * குளிர் மா மலை கொற்ற மலை *
 நில மலை நீண்ட மலை * திருமாலிருஞ் சோலையதே (5)

Pasuram 342 · corpus 354

Pasuram 342

Study resources at Uveda
பாண்டவர் தம்முடைய * பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் *
 ஆண்டு அங்கு நூற்றுவர் தம் * பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை **
 பாண் தகு வண்டினங்கள் * பண்கள் பாடி மதுப் பருக *
 தோண்டல் உடைய மலை * தொல்லை மாலிருஞ் சோலையதே (6)

Pasuram 343 · corpus 355

Pasuram 343

Study resources at Uveda
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து * அரக்கர் தங்கள்
 இனம் கழு ஏற்றுவித்த * ஏழில் தோள் எம் இராமன் மலை **
 கனம் கொழி தெள் அருவி * வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் *
 இனம் குழு ஆடும் மலை * எழில் மாலிருஞ் சோலையதே (7)

Pasuram 344 · corpus 356

Pasuram 344

Study resources at Uveda
எரி சிதறும் சரத்தால் * இலங்கையினைத் * தன்னுடைய
 வரி சிலை வாயில் பெய்து * வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த **
 அரையன் அமரும் மலை * அமரரோடு கோனும் சென்று *
 திரிசுடர் சூழும் மலை * திரு மாலிருஞ் சோலையதே (8)

Pasuram 345 · corpus 357

Pasuram 345

Study resources at Uveda
கோட்டு மண் கொண்டு * இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து *
 மீட்டும் அது உண்டு உமிழ்ந்து * விளையாடும் விமலன் மலை **
 ஈட்டிய பல் பொருள்கள் * எம்பிரானுக்கு அடியுறை என்று *
 ஓட்டரும் தண் சிலம்பாறு உடை * மாலிருஞ் சோலையதே (9)

Pasuram 346 · corpus 358

Pasuram 346

Study resources at Uveda
ஆயிரம் தோள் பரப்பி * முடி ஆயிரம் மின் இலக *
 ஆயிரம் பைந்தலைய * அனந்த சயனன் ஆளும் மலை **
 ஆயிரம் ஆறுகளும் * சுனைகள் பல ஆயிரமும் *
 ஆயிரம் பூம் பொழிலும் உடை * மாலிருஞ் சோலையதே (10)

Pasuram 347 · corpus 359

Pasuram 347

Study resources at Uveda
மாலிருஞ்சோலை என்னும் * மலையை உடைய மலையை *
 நாலிரு மூர்த்தி தன்னை * நால் வேதக் கடல் அமுதை **
 மேல் இருங் கற்பகத்தை * வேதாந்த விழுப் பொருளின் *
 மேல் இருந்த விளக்கை * விட்டுசித்தன் விரித்தனனே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.