This page preserves the source-defined decade 4, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வண்ண நல் மணியும் * மரதகமும் அழுத்தி * நிழல் எழும்
திண்ணை சூழ் * திருக்கோட்டியூர்த் திரு மாலவன் திருநாமங்கள் **
எண்ணக் கண்ட விரல்களால் * இறைப் பொழுதும் எண்ணகிலாது போய் *
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் * கவளம் உந்துகின்றார்களே (3)
ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு * தூ மலர் சாடிப் போய் *
தீமை செய்து இளவாளைகள் * விளையாடு நீர்த் திருக்கோட்டியூர் **
நேமி சேர் தடங்கையினானை * நினைப்பு இலா வலி நெஞ்சு உடை *
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் * புல்லைத் திணிமினே (5)
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று * கூடி ஆடி விழாச் செய்து *
திருந்து நான்மறையோர் * இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் **
கருந் தடமுகில் வண்ணனைக் * கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் *
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் * எத்தவங்கள் செய்தார் கொலோ (7)