This page preserves the source-defined decade 4, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி * அன்னை அத்தன் என் புத்திரர் பூமி *
வாச வார் குழலாள் என்று மயங்கி * மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே **
கேசவா புருடோத்தமா என்றும் * கேழல் ஆகிய கேடிலீ என்றும் *
பேசுவார் அவர் எய்தும் பெருமை * பேசுவான் புகில் நம் பரம் அன்றே (1)
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் * சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து *
ஆர் வினவிலும் வாய் திறவாதே * அந்த காலம் அடைவதன் முன்னம் **
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து * மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி *
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)
மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து * மேல் மிடற்றினை உள் எழ வாங்கி *
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் * கண் உறக்கமது ஆவதன் முன்னம் **
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை * மூன்று மாத்திரை உள் எழ வாங்கி *
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் * விண்ணகத்தினில் மேவலும் ஆமே (4)
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி * ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை *
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப் * பையவே தலை சாய்ப்பதன் முன்னம் **
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை * மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து * ஆவது ஓர் கருமம் சாதிப்பார்க்கு * என்றும் சாதிக்கலாமே (6)
தென்னவன் தமர் செப்பம் இலாதார் * சே அதக்குவார் போலப் புகுந்து *
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப் * பின் முன் ஆக இழுப்பதன் முன்னம் **
இன்னவன் இனையான் என்று சொல்லி * எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி *
மன்னவன் மதுசூதனன் என்பார் * வானகத்து மன்றாடிகள் தாமே (7)
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து * குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து *
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு * நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே **
கோடி மூடி எடுப்பதன் முன்னம் * கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு *
கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால் * குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே (8)
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப * வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற *
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் * தாரமும் ஒரு பக்கம் அலற்ற **
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் * செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் * ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9)
செத்துப் போவதோர் போது நினைந்து * செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் *
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் * பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன் **
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் * செய்த மாலை இவை பத்தும் வல்லார் *
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் * சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.