Pasuram 369 · corpus 381
Pasuram 369
காசும் கறை உடைக் கூறைக்கும் * அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் * அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள் **
கேசவன் பேர் இட்டு * நீங்கள் தேனித்து இருமினோ *
நாயகன் நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (1)
Periyalvar · Pasurams 369–378
Corpus pasurams 381–390
This page preserves the source-defined decade 4, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 369 · corpus 381
காசும் கறை உடைக் கூறைக்கும் * அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் * அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள் **
கேசவன் பேர் இட்டு * நீங்கள் தேனித்து இருமினோ *
நாயகன் நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (1)
Pasuram 370 · corpus 382
அங்கு ஒரு கூறை * அரைக்கு உடுப்பதன் ஆசையால் *
மங்கிய மானிட சாதியின் * பேர் இடும் ஆதர்காள்! **
செங்கண் நெடுமால்! * சிரீதரா என்று அழைத்தக்கால் *
நங்கைகாள் நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (2)
Pasuram 371 · corpus 383
உச்சியில் எண்ணெயும் * சுட்டியும் வளையும் உகந்து *
எச்சம் பொலிந்தீர்காள் * என் செய்வான் பிறர் பேர் இட்டீர்? **
பிச்சை புக்கு ஆகிலும் * எம்பிரான் திருநாமமே
நச்சுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (3)
Pasuram 372 · corpus 384
மானிட சாதியில் தோன்றிற்று * ஓர் மானிட சாதியை *
மானிட சாதியின் பேர் இட்டால் * மறுமைக்கு இல்லை **
வான் உடை மாதவா * கோவிந்தா என்று அழைத்தக்கால் *
நான் உடை நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (4)
Pasuram 373 · corpus 385
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் * மல ஊத்தையை *
மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் * மறுமைக்கு இல்லை **
குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா * என்று அழைத்தக்கால் *
நலம் உடை நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (5)
Pasuram 374 · corpus 386
நாடும் நகரும் அறிய * மானிடப் பேர் இட்டு *
கூடி அழுங்கிக் * குழியில் வீழ்ந்து வழுக்காதே **
சாடு இறப் பாய்ந்த தலைவா * தாமோதரா என்று
நாடுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (6)
Pasuram 375 · corpus 387
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் * ஏழை மனிசர்காள் **
கண்ணுக்கு இனிய * கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (7)
Pasuram 376 · corpus 388
நம்பி பிம்பி என்று * நாட்டு மானிடப் பேர் இட்டால் *
நம்பும் பிம்பும் எல்லாம் * நாலு நாளில் அழுங்கிப்போம் **
செம்பெருந் தாமரைக் கண்ணன் * பேர் இட்டு அழைத்தக்கால் *
நம்பிகாள்! நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (8)
Pasuram 377 · corpus 389
ஊத்தைக் குழியில் * அமுதம் பாய்வது போல் * உங்கள்
மூத்திரப் பிள்ளையை * என் முகில் வண்ணன் பேர் இட்டு **
கோத்துக் குழைத்துக் * குணாலம் ஆடித் திரிமினோ! *
நாத் தகு நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (9)
Pasuram 378 · corpus 390
சீர் அணி மால் * திருநாமமே இடத் தேற்றிய *
வீர் அணி தொல்புகழ் * விட்டுசித்தன் விரித்த ** சொல்
ஓர் அணி ஒண் தமிழ் * ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் *
பேர் அணி வைகுந்தத்து * என்றும் பேணி இருப்பரே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.