Corpus pasurams 391–401

This page preserves the source-defined decade 4, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 379 · corpus 391

Pasuram 379

Study resources at Uveda
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த * எம் தாசரதி போய் *
 எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட * எம் புருடோத்தமன் இருக்கை **
 கங்கை கங்கை என்ற வாசகத்தாலே * கடு வினை களைந்திடுகிற்கும் *
 கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற * கண்டம் என்னும் கடிநகரே (1)

Pasuram 380 · corpus 392

Pasuram 380

Study resources at Uveda
சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் * சந்திரன் வெங்கதிர் அஞ்ச *
 மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின் * மால் புருடோத்தமன் வாழ்வு **
 நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் * நாரணன் பாதத் துழாயும் *
 கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (2)

Pasuram 381 · corpus 393

Pasuram 381

Study resources at Uveda
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி * அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து * அங்கு
 எதிர் முக அசுரர் தலைகளை இடறும் * எம் புருடோத்தமன் இருக்கை **
 சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் * சங்கரன் சடையினில் தங்கி *
 கதிர் முகம் மணிகொண்டு இழி புனல் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (3)

Pasuram 382 · corpus 394

Pasuram 382

Study resources at Uveda
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள * ஏற்று வந்து எதிர் பொரு சேனை *
 நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் * நம் புருடோத்தமன் நகர்தான் **
 இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் * இரு கரை உலகு இரைத்து ஆட *
 கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (4)

Pasuram 383 · corpus 395

Pasuram 383

Study resources at Uveda
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் * ஒண் சுடர் ஆழியும் சங்கும் *
 மழுவொடு வாளும் படைக்கலம் உடைய * மால் புருடோத்தமன் வாழ்வு **
 எழுமையும் கூடி ஈண்டிய பாவம் * இறைப் பொழுது அளவினில் எல்லாம் *
 கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (5)

Pasuram 384 · corpus 396

Pasuram 384

Study resources at Uveda
தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் * சலசல பொழிந்திடக் கண்டு *
 மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை * மால் புருடோத்தமன் வாழ்வு **
 அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் * அவபிரதம் குடைந்து ஆட *
 கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (6)

Pasuram 385 · corpus 397

Pasuram 385

Study resources at Uveda
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி * மேல் இருந்தவன் தலை சாடி *
 மல் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த * மால் புருடோத்தமன் வாழ்வு **
 அற்புதம் உடைய ஐராவத மதமும் * அவர் இளம்படியர் ஒண் சாந்தும் *
 கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (7)

Pasuram 386 · corpus 398

Pasuram 386

Study resources at Uveda
திரை பொரு கடல் சூழ் திண்மதில் துவரை வேந்து * தன் மைத்துனன்மார்க்காய் *
 அரசினை அவிய அரசினை அருளும் * அரி புருடோத்தமன் அமர்வு **
 நிரை நிரையாக நெடியன யூபம் * நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு
 கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (8)

Pasuram 387 · corpus 399

Pasuram 387

Study resources at Uveda
வட திசை மதுரை சாளக்கிராமம் * வைகுந்தம் துவரை அயோத்தி *
 இடம் உடை வதரி இடவகை உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
 தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் * தலைப்பற்றிக் கரை மரம் சாடி *
 கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (9)

Pasuram 388 · corpus 400

Pasuram 388

Study resources at Uveda
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் * மூன்று எழுத்து ஆக்கி * மூன்று எழுத்தை
 ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
 மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி * மூன்றினில் மூன்று உரு ஆனான் *
 கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (10)

Pasuram 389 · corpus 401

Pasuram 389

Study resources at Uveda
பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து * உறை புருடோத்தமன் அடிமேல் *
 வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் * விட்டுசித்தன் விருப்பு உற்றுத் **
 தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை * தங்கிய நா உடையார்க்குக் *
 கங்கையில் திருமால் கழலிணைக் கீழே * குளித்திருந்த கணக்கு ஆமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.