Pasuram 390 · corpus 402
Pasuram 390
மா தவத்தோன் புத்திரன் போய் * மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா * உருவுருவே கொடுத்தான் ஊர் **
தோதவத்தித் தூய் மறையோர் * துறைபடியத் துளும்பி எங்கும் *
போதில் வைத்த தேன் சொரியும் * புனல் அரங்கம் என்பதுவே (1)
Periyalvar · Pasurams 390–399
Corpus pasurams 402–411
This page preserves the source-defined decade 4, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 390 · corpus 402
மா தவத்தோன் புத்திரன் போய் * மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா * உருவுருவே கொடுத்தான் ஊர் **
தோதவத்தித் தூய் மறையோர் * துறைபடியத் துளும்பி எங்கும் *
போதில் வைத்த தேன் சொரியும் * புனல் அரங்கம் என்பதுவே (1)
Pasuram 391 · corpus 403
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த * பிள்ளைகளை நால்வரையும் *
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து * ஒருப்படுத்த உறைப்பன் ஊர் **
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் * வருவிருந்தை அளித்திருப்பார் *
சிறப்பு உடைய மறையவர் வாழ் * திருவரங்கம் என்பதுவே (2)
Pasuram 392 · corpus 404
மருமகன் தன் சந்ததியை * உயிர்மீட்டு மைத்துனன்மார் *
உருமகத்தே வீழாமே * குருமுகமாய்க் காத்தான் ஊர் **
திருமுகமாய்ச் செங்கமலம் * திருநிறமாய்க் கருங்குவளை *
பொரு முகமாய் நின்று அலரும் * புனல் அரங்கம் என்பதுவே (3)
Pasuram 393 · corpus 405
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக் * கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும் * இராச்சியமும் ஆங்கு ஒழிய **
கான் தொடுத்த நெறி போகிக் * கண்டகரைக் களைந்தான் ஊர் *
தேன்தொடுத்த மலர்ச் சோலைத் * திருவரங்கம் என்பதுவே (4)
Pasuram 394 · corpus 406
பெருவரங்கள் அவைபற்றிப் * பிழக்கு உடைய இராவணனை *
உரு அரங்கப் பொருது அழித்து * இவ் உலகினைக் கண்பெறுத்தான் ஊர் **
குரவு அரும்பக் கோங்கு அலரக் * குயில் கூவும் குளிர் பொழில் சூழ் *
திருவரங்கம் என்பதுவே * என் திருமால் சேர்விடமே (5)
Pasuram 395 · corpus 407
கீழ் உலகில் அசுரர்களைக் * கிழங்கிருந்து கிளராமே *
ஆழி விடுத்து அவருடைய * கரு அழித்த அழிப்பன் ஊர் **
தாழை மடல் ஊடு உரிஞ்சித் * தவள வண்ணப் பொடி அணிந்து *
யாழின் இசை வண்டினங்கள் * ஆளம் வைக்கும் அரங்கமே (6)
Pasuram 396 · corpus 408
கொழுப்பு உடைய செழுங்குருதி * கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய *
பிழக்கு உடைய அசுரர்களைப் * பிணம் படுத்த பெருமான் ஊர் **
தழுப்பு அரிய சந்தனங்கள் * தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு *
தெழிப்பு உடைய காவிரி வந்து * அடிதொழும் சீர் அரங்கமே (7)
Pasuram 397 · corpus 409
வல் எயிற்றுக் கேழலுமாய் * வாள்எயிற்றுச் சீயமுமாய் *
எல்லை இல்லாத் தரணியையும் * அவுணனையும் இடந்தான் ஊர் **
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு * எம்பெருமான் குணம் பாடி *
மல்லிகை வெண்சங்கு ஊதும் * மதிள் அரங்கம் என்பதுவே (8)
Pasuram 398 · corpus 410
குன்று ஆடு கொழு முகில் போல் * குவளைகள் போல் குரைகடல் போல் *
நின்று ஆடு கணமயில் போல் * நிறம் உடைய நெடுமால் ஊர் **
குன்று ஊடு பொழில் நுழைந்து * கொடி இடையார் முலை அணவி *
மன்று ஊடு தென்றல் உலாம் * மதில் அரங்கம் என்பதுவே (9)
Pasuram 399 · corpus 411
பரு வரங்கள் அவைபற்றிப் * படை ஆலித்து எழுந்தானை *
செரு அரங்கப் பொருது அழித்த * திருவாளன் திருப்பதிமேல் **
திருவரங்கத் தமிழ் மாலை * விட்டுசித்தன் விரித்தன கொண்டு *
இருவர் அங்கம் எரித்தானை * ஏத்த வல்லார் அடியோமே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.