Corpus pasurams 443–452

This page preserves the source-defined decade 5, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 431 · corpus 443

Pasuram 431

Study resources at Uveda
நெய்க் குடத்தைப் பற்றி * ஏறும் எறும்புகள் போல் நிரந்து * எங்கும்
 கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்! * காலம் பெற உய்யப் போமின் **
 மெய்க் கொண்டு வந்து புகுந்து * வேதப் பிரானார் கிடந்தார் *
 பைக் கொண்ட பாம்பு அணையோடும் * பண்டு அன்று பட்டினம் காப்பே (1)

Pasuram 432 · corpus 444

Pasuram 432

Study resources at Uveda
சித்திரகுத்தன் எழுத்தால் * தென்புலக் கோன் பொறி ஒற்றி *
 வைத்த இலச்சினை மாற்றித் * தூதுவர் ஓடி ஒளித்தார் **
 முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் * மூதறிவாளர் முதல்வன் *
 பத்தர்க்கு அமுதன் அடியேன் * பண்டு அன்று பட்டினம் காப்பே (2)

Pasuram 433 · corpus 445

Pasuram 433

Study resources at Uveda
வயிற்றிற் தொழுவைப் பிரித்து * வன்புலச் சேவை அதக்கி *
 கயிற்றும் அக்கு ஆணி கழித்துக் * காலிடைப் பாசம் கழற்றி **
 எயிற்றிடை மண் கொண்ட எந்தை * இராப்பகல் ஓதுவித்து * என்னைப்
 பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் * பண்டு அன்று பட்டினம் காப்பே (3)

Pasuram 434 · corpus 446

Pasuram 434

Study resources at Uveda
மங்கிய வல்வினை நோய்காள்! * உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் *
 இங்குப் புகேன்மின் புகேன்மின் * எளிது அன்று கண்டீர் புகேன்மின் **
 சிங்கப் பிரான் அவன் எம்மான் * சேரும் திருக்கோயில் கண்டீர் *
 பங்கப்படாது உய்யப் போமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (4)

Pasuram 435 · corpus 447

Pasuram 435

Study resources at Uveda
மாணிக் குறள் உரு ஆய * மாயனை என் மனத்துள்ளே *
 பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் * பிறிது இன்றி **
 மாணிக்கப் பண்டாரம் கண்டீர் * வலி வன் குறும்பர்கள் உள்ளீர் *
 பாணிக்க வேண்டா நடமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (5)

Pasuram 436 · corpus 448

Pasuram 436

Study resources at Uveda
உற்ற உறுபிணி நோய்காள் * உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் *
 பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் * பேணும் திருக்கோயில் கண்டீர் **
 அற்றம் உரைக்கின்றேன் * இன்னம் ஆழ்வினைகாள்! * உமக்கு இங்கு ஓர்
 பற்றில்லை கண்டீர் நடமின் * பண்டு அன்று பட்டினம் காப்பே (6)

Pasuram 437 · corpus 449

Pasuram 437

Study resources at Uveda
கொங்கைச் சிறு வரை என்னும் * பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி *
 அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு * அழுந்திக் கிடந்து உழல்வேனை **
 வங்கக் கடல் வண்ணன் அம்மான் * வல்வினை ஆயின மாற்றி *
 பங்கப்படா வண்ணம் செய்தான் * பண்டு அன்று பட்டினம் காப்பே (7)

Pasuram 438 · corpus 450

Pasuram 438

Study resources at Uveda
ஏதங்கள் ஆயின எல்லாம் * இறங்கல் இடுவித்து * என்னுள்ளே
 பீதக வாடைப் பிரனார் * பிரம குருவாகி வந்து **
 போதில் கமல வன் நெஞ்சம் * புகுந்து என் சென்னித் திடரில் *
 பாத இலச்சினை வைத்தார் * பண்டு அன்று பட்டினம் காப்பே (8)

Pasuram 439 · corpus 451

Pasuram 439

Study resources at Uveda
உறகல் உறகல் உறகல் * ஒண்சுடர் ஆழியே! சங்கே! *
 அற எறி நாந்தக வாளே * அழகிய சார்ங்கமே தண்டே! **
 இறவு படாமல் இருந்த * எண்மர் உலோக பாலீர்காள்! *
 பறவை அரையா உறகல் * பள்ளியறை குறிக்கொண்மின் (9)

Pasuram 440 · corpus 452

Pasuram 440

Study resources at Uveda
அரவத்து அமளியினோடும் * அழகிய பாற்கடலோடும் *
 அரவிந்தப் பாவையும் தானும் * அகம்படி வந்து புகுந்து **
 பரவைத் திரை பல மோதப் * பள்ளி கொள்கின்ற பிரானை *
 பரவுகின்றான் விட்டுசித்தன் * பட்டினம் காவல் பொருட்டே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.