Corpus pasurams 668–676

This page preserves the source-defined chapter 3 grouping and brings its 9 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 22 · corpus 668

Pasuram 22

Study resources at Uveda
மெய் இல் வாழ்க்கையை * மெய் எனக் கொள்ளும் * இவ்
 வையம்தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
 ஐயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
 மையல் கொண்டொழிந்தேன் * என்தன் மாலுக்கே (1)

Pasuram 23 · corpus 669

Pasuram 23

Study resources at Uveda
நூலின் நேர் இடையார் * திறத்தே நிற்கும் *
 ஞாலம் தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
 ஆலியா அழையா * அரங்கா என்று *
 மால் எழுந்தொழிந்தேன் * என்தன் மாலுக்கே (2)

Pasuram 24 · corpus 670

Pasuram 24

Study resources at Uveda
மாரனார் * வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் *
 பாரினாரொடும் * கூடுவது இல்லை யான் **
 ஆர மார்வன் * அரங்கன் அனந்தன் * நல்
 நாரணன் * நரகாந்தகன் பித்தனே (3)

Pasuram 25 · corpus 671

Pasuram 25

Study resources at Uveda
உண்டியே உடையே * உகந்து ஓடும் * இம்
 மண்டலத்தொடும் * கூடுவது இல்லை யான் **
 அண்டவாணன் * அரங்கன் வன் பேய் முலை *
 உண்ட வாயன்தன் * உன்மத்தன் காண்மினே (4)

Pasuram 26 · corpus 672

Pasuram 26

Study resources at Uveda
தீதில் நன்னெறி நிற்க * அல்லாது செய் *
 நீதியாரொடும் * கூடுவது இல்லை யான் **
 ஆதி ஆயன் * அரங்கன் அந் தாமரைப் *
 பேதை மா மணவாளன் * தன் பித்தனே (5)

Pasuram 27 · corpus 673

Pasuram 27

Study resources at Uveda
எம் பரத்தர் * அல்லாரொடும் கூடலன் *
 உம்பர் வாழ்வை * ஒன்றாகக் கருதிலன் **
 தம்பிரான் அமரர்க்கு * அரங்க நகர் *
 எம்பிரானுக்கு * எழுமையும் பித்தனே (6)

Pasuram 28 · corpus 674

Pasuram 28

Study resources at Uveda
எத் திறத்திலும் * யாரொடும் கூடும் * அச்
 சித்தந்தன்னைத் * தவிர்த்தனன் செங்கண் மால் **
 அத்தனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
 பித்தனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (7)

Pasuram 29 · corpus 675

Pasuram 29

Study resources at Uveda
பேயரே * எனக்கு யாவரும் * யானும் ஓர்
 பேயனே * எவர்க்கும் இது பேசி என் **
 ஆயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
 பேயனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (8)

Pasuram 30 · corpus 676

Pasuram 30

Study resources at Uveda
அங்கை ஆழி * அரங்கன் அடியிணை *
 தங்கு சிந்தைத் * தனிப் பெரும் பித்தனாய் **
 கொங்கர்கோன் * குலசேகரன் சொன்ன சொல் *
 இங்கு வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (9)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.