Pasuram 31 · corpus 677
Pasuram 31
ஊன் ஏறு செல்வத்து * உடற்பிறவி யான் வேண்டேன் *
ஆனேறு ஏழ் வென்றான் * அடிமைத் திறம் அல்லால் **
கூன் ஏறு சங்கம் இடத்தான் * தன் வேங்கடத்து *
கோனேரி வாழும் * குருகாய்ப் பிறப்பேனே (1)
Kulasekara Azhwar · Pasurams 31–41
Corpus pasurams 677–687
This page preserves the source-defined chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 31 · corpus 677
ஊன் ஏறு செல்வத்து * உடற்பிறவி யான் வேண்டேன் *
ஆனேறு ஏழ் வென்றான் * அடிமைத் திறம் அல்லால் **
கூன் ஏறு சங்கம் இடத்தான் * தன் வேங்கடத்து *
கோனேரி வாழும் * குருகாய்ப் பிறப்பேனே (1)
Pasuram 32 · corpus 678
ஆனாத செல்வத்து * அரம்பையர்கள் தன் சூழ *
வான் ஆளும் செல்வமும் * மண் அரசும் யான் வேண்டேன் **
தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கடச் சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் * விதி உடையேன் ஆவேனே (2)
Pasuram 33 · corpus 679
பின் இட்ட சடையானும் * பிரமனும் இந்திரனும் *
துன்னிட்டுப் புகல் அரிய * வைகுந்த நீள் வாசல் **
மின் வட்டச் சுடர் ஆழி * வேங்கடக்கோன் தான் உமிழும் *
பொன் வட்டில் பிடித்து உடனே * புகப்பெறுவேன் ஆவேனே (3)
Pasuram 34 · corpus 680
ஒண் பவள வேலை * உலவு தன் பாற்கடலுள் *
கண் துயிலும் மாயோன் * கழலிணைகள் காண்பதற்கு **
பண் பகரும் வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்து *
செண்பகமாய் நிற்கும் * திரு உடையேன் ஆவேனே (4)
Pasuram 35 · corpus 681
கம்ப மத யானைக் * கழுத்தகத்தின்மேல் இருந்து *
இன்பு அமரும் செல்வமும் * இவ் அரசும் யான் வேண்டேன் **
எம்பெருமான் ஈசன் * எழில் வேங்கட மலை மேல் *
தம்பகமாய் நிற்கும் * தவம் உடையேன் ஆவேனே (5)
Pasuram 36 · corpus 682
மின் அனைய நுண்ணிடையார் * உருப்பசியும் மேனகையும் *
அன்னவர்தம் பாடலொடும் * ஆடல் அவை ஆதரியேன் **
தென்ன என வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்துள் *
அன்னனைய பொற்குவடாம் * அருந்தவத்தென் ஆவேனே (6)
Pasuram 37 · corpus 683
வான் ஆளும் மா மதி போல் * வெண் குடைக்கீழ் மன்னவர் தம் *
கோன் ஆகி வீற்றிருந்து * கொண்டாடும் செல்வு அறியேன் **
தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கட மலை மேல் *
கானாறாய்ப் பாயும் * கருத்து உடையேன் ஆவேனே (7)
Pasuram 38 · corpus 684
பிறை ஏறு சடையானும் * பிரமனும் இந்திரனும் *
முறையாய பெரு வேள்விக் * குறை முடிப்பான் மறை ஆனான் **
வெறியார் தண் சோலைத் * திருவேங்கட மலை மேல் *
நெறியாய்க் கிடக்கும் * நிலை உடையேன் ஆவேனே (8)
Pasuram 39 · corpus 685
செடியாய வல்வினைகள் தீர்க்கும் * திருமாலே *
நெடியானே வேங்கடவா * நின் கோயிலின் வாசல் **
அடியாரும் வானவரும் * அரம்பையரும் கிடந்து இயங்கும் *
படியாய்க் கிடந்து * உன் பவளவாய் காண்பேனே (9)
Pasuram 40 · corpus 686
உம்பர் உலகு ஆண்டு * ஒரு குடைக்கீழ் உருப்பசி தன் *
அம்பொன் கலை அல்குல் * பெற்றாலும் ஆதரியேன் **
செம் பவள வாயான் * திருவேங்கடம் என்னும் *
எம்பெருமான் பொன்மலை மேல் * ஏதேனும் ஆவேனே (10)
Pasuram 41 · corpus 687
மன்னிய தண் சாரல் * வட வேங்கடத்தான் தன் *
பொன் இயலும் சேவடிகள் * காண்பான் புரிந்து இறைஞ்சி **
கொல் நவிலும் கூர்வேல் * குலசேகரன் சொன்ன *
பன்னிய நூல் தமிழ் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.