Corpus pasurams 688–697

This page preserves the source-defined chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 42 · corpus 688

Pasuram 42

Study resources at Uveda
தரு துயரம் தடாயேல் உன் * சரண் அல்லால் சரண் இல்லை *
 விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் * வித்துவக்கோட்டு அம்மானே **
 அரி சினத்தால் ஈன்ற தாய் * அகற்றிடினும் * மற்று அவள்தன்
 அருள் நினைந்தே அழும் குழவி * அதுவே போன்று இருந்தேனே (1)

Pasuram 43 · corpus 689

Pasuram 43

Study resources at Uveda
கண்டார் இகழ்வனவே * காதலன்தான் செய்திடினும் *
 கொண்டானை அல்லால் * அறியாக் குலமகள் போல் **
 விண் தோய் மதில் புடை சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
 கொண்டாளாயாகிலும் * உன் குரைகழலே கூறுவனே (2)

Pasuram 44 · corpus 690

Pasuram 44

Study resources at Uveda
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் * வித்துவக்கோட்டு அம்மா * என்
 பால் நோக்காயாகிலும் * உன் பற்று அல்லால் பற்று இலேன் **
 தான் நோக்காது * எத்துயரம் செய்திடினும் * தார் வேந்தன்
 கோல் நோக்கி வாழும் * குடி போன்று இருந்தேனே (3)

Pasuram 45 · corpus 691

Pasuram 45

Study resources at Uveda
வாளால் அறுத்துச் சுடினும் * மருத்துவன்பால் *
 மாளாத காதல் * நோயாளன் போல் மாயத்தால் **
 மீளாத் துயர் தரினும் * வித்துவக்கோட்டு அம்மா * நீ
 ஆளா உனது அருளே * பார்ப்பன் அடியேனே (4)

Pasuram 46 · corpus 692

Pasuram 46

Study resources at Uveda
வெங்கண் திண்களிறு அடர்த்தாய் * வித்துவக்கோட்டு அம்மானே *
 எங்குப் போய் உய்கேன்? * உன் இணையடியே அடையல் அல்லால் **
 எங்கும் போய்க் கரை காணாது * எறிகடல்வாய் மீண்டு ஏயும் *
 வங்கத்தின் கூம்பு ஏறும் * மாப் பறவை போன்றேனே (5)

Pasuram 47 · corpus 693

Pasuram 47

Study resources at Uveda
செந்தழலே வந்து * அழலைச் செய்திடினும் * செங்கமலம்
 அந்தரம் சேர் * வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் **
 வெந்துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
 அந்தமில் சீர்க்கு அல்லால் * அகம் குழைய மாட்டேனே (6)

Pasuram 48 · corpus 694

Pasuram 48

Study resources at Uveda
எத்தனையும் வான் மறந்த * காலத்தும் பைங்கூழ்கள் *
 மைத்து எழுந்த மா முகிலே * பார்த்திருக்கும் மற்று அவை போல் **
 மெய்த் துயர் வீட்டாவிடினும் * வித்துவக்கோட்டு அம்மா * என்
 சித்தம் மிக உன்பாலே * வைப்பன் அடியேனே (7)

Pasuram 49 · corpus 695

Pasuram 49

Study resources at Uveda
தொக்கு இலங்கி யாறெல்லாம் * பரந்து ஓடி * தொடுகடலே
 புக்கு அன்றிப் புறம்நிற்க * மாட்டாத மற்று அவை போல் **
 மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் * வித்துவக்கோட்டு அம்மா * உன்
 புக்கு இலங்கு சீர் அல்லால் * புக்கிலன் காண் புண்ணியனே (8)

Pasuram 50 · corpus 696

Pasuram 50

Study resources at Uveda
நின்னையே தான் வேண்டி * நீள் செல்வம் வேண்டாதான் *
 தன்னையே தான் வேண்டும் * செல்வம்போல் மாயத்தால் **
 மின்னையே சேர் திகிரி * வித்துவக்கோட்டு அம்மானே *
 நின்னையே தான் வேண்டி * நிற்பன் அடியேனே (9)

Pasuram 51 · corpus 697

Pasuram 51

Study resources at Uveda
வித்துவக்கோட்டு அம்மா * நீ வேண்டாயே ஆயிடினும் *
 மற்று ஆரும் பற்று இலேன் என்று * அவனைத் தாள் நயந்து **
 கொற்ற வேல் தானைக் * குலசேகரன் சொன்ன *
 நற்றமிழ் பத்தும் வல்லார் * நண்ணார் நரகமே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.