Corpus pasurams 698–707

This page preserves the source-defined chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 52 · corpus 698

Pasuram 52

Study resources at Uveda
ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் * எனைப் பலர் உள்ள இவ் ஊரில் * உன்தன்
 மார்வு தழுவுதற்கு * ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு **
 கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் * கூசி நடுங்கி யமுனை ஆற்றில் *
 வார் மணல் குன்றில் புலர நின்றேன் * வாசுதேவா உன் வரவு பார்த்தே (1)

Pasuram 53 · corpus 699

Pasuram 53

Study resources at Uveda
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி * கீழை அகத்துத் தயிர் கடையக்
 கண்டு * ஒல்லை நானும் கடைவன் என்று * கள்ள விழியை விழித்துப் புக்கு **
 வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ * வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப *
 தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் * தாமோதரா மெய் அறிவன் நானே (2)

Pasuram 54 · corpus 700

Pasuram 54

Study resources at Uveda
கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் * கடைக்கணித்து * ஆங்கே ஒருத்திதன்பால்
 மருவி மனம் வைத்து * மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து **
 புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி * அவளுக்கும் மெய்யன் அல்லை *
 மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே * வளர்கின்றதால் உன்தன் மாயை தானே (3)

Pasuram 55 · corpus 701

Pasuram 55

Study resources at Uveda
தாய் முலைப் பாலில் அமுதிருக்கத் * தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று *
 பேய் முலை வாய்வைத்து நஞ்சை உண்டு * பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் **
 ஆய்மிகு காதலோடு யான் இருப்ப * யான் விட வந்த என் தூதியோடே *
 நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் * அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே (4)

Pasuram 56 · corpus 702

Pasuram 56

Study resources at Uveda
மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு * வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே *
 பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப் * போகின்ற போது நான் கண்டு நின்றேன் **
 கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக் * கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் *
 என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்? * இன்னம் அங்கே நட நம்பி நீயே (5)

Pasuram 57 · corpus 703

Pasuram 57

Study resources at Uveda
மற்பொரு தோள் உடை வாசுதேவா * வல்வினையேன் துயில் கொண்டவாறே *
 இற்றை இரவிடை ஏமத்து என்னை * இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய் **
 அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் * அரிவையரோடும் அணைந்து வந்தாய் *
 எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்? * எம்பெருமான் நீ எழுந்தருளே (6)

Pasuram 58 · corpus 704

Pasuram 58

Study resources at Uveda
பையரவின் அணைப் பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் * நீ உகக்கும்
 மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம் * வைகி எம் சேரி வரவு ஒழி நீ **
 செய்ய உடையும் திருமுகமும் * செங்கனிவாயும் குழலும் கண்டு *
 பொய் ஒரு நாள் பட்டதே அமையும் * புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (7) *

Pasuram 59 · corpus 705

Pasuram 59

Study resources at Uveda
என்னை வருக எனக் குறித்திட்டு * இனமலர் முல்லையின் பந்தர் நீழல் *
 மன்னி அவளைப் புணரப் புக்கு * மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் **
 பொன்னிற ஆடையைக் கையில் தாங்கிப் * பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் *
 இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் * வருதியேல் என் சினம் தீர்வன் நானே (8)

Pasuram 60 · corpus 706

Pasuram 60

Study resources at Uveda
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க * மயில் தழைப் பீலி சூடி *
 பொங்கு இள ஆடை அரையில் சாத்தி * பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து **
 கொங்கு நறுங் குழலார்களோடு * குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் *
 எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத * உன் குழலின் இசை போதராதே? (9)

Pasuram 61 · corpus 707

Pasuram 61

Study resources at Uveda
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து * இள ஆய்ச்சிமார்கள் *
 எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி * எள்கி உரைத்த உரையதனை **
 கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான் * குலசேகரன் இன்னிசையில் மேவி *
 சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் * சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.