Corpus pasurams 708–718

This page preserves the source-defined chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 62 · corpus 708

Pasuram 62

Study resources at Uveda
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ * அம்புயத் தடங் கண்ணினன் தாலோ *
 வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ * வேழப் போதகம் அன்னவன் தாலோ **
 ஏல வார் குழல் என்மகன் தாலோ * என்று என்று உன்னை என் வாயிடை நிறைய *
 தால் ஒலித்திடும் திருவினை இல்லாத் * தாயரில் கடை ஆயின தாயே (1)

Pasuram 63 · corpus 709

Pasuram 63

Study resources at Uveda
வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண் * மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி *
 முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள் * பொலியும் நீர் முகில் குழவியே போல **
 அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும் * அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த *
 கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ * கேசவா கெடுவேன் கெடுவேனே (2)

Pasuram 64 · corpus 710

Pasuram 64

Study resources at Uveda
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் * முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி *
 எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே * எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே **
 உந்தை யாவன் என்று உரைப்ப * நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட *
 நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா * நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே (3)

Pasuram 65 · corpus 711

Pasuram 65

Study resources at Uveda
களி நிலா எழில் மதிபுரை முகமும் * கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும் *
 தளிர் மலர்க் கருங்குழல் பிறையதுவும் * தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த **
 இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் * பருகுவேற்கு இவள் தாயென நினைந்த *
 அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த * பாவியேன் எனது ஆவி நில்லாதே (4)

Pasuram 66 · corpus 712

Pasuram 66

Study resources at Uveda
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர * மணிவாயிடை முத்தம்
 தருதலும் * உன்தன் தாதையைப் போலும் * வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர **
 விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து * வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும் *
 திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் * எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (5)

Pasuram 67 · corpus 713

Pasuram 67

Study resources at Uveda
தண் அந்தாமரைக் கண்ணனே கண்ணா * தவழ்ந்து எழுந்து தளர்ந்ததோர் நடையால் *
 மண்ணில் செம்பொடி ஆடி வந்து * என்தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ **
 வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் * வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் *
 உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் * என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே (6)

Pasuram 68 · corpus 714

Pasuram 68

Study resources at Uveda
குழகனே என்தன் கோமளப் பிள்ளாய் * கோவிந்தா என் குடங்கையில் மன்னி *
 ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் * ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா *
 மழலை மென்னகை இடையிடை அருளா * வாயிலே முலை இருக்க என் முகத்தே *
 எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் * இழந்தேன் இழந்தேனே! (7)

Pasuram 69 · corpus 715

Pasuram 69

Study resources at Uveda
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் * முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும் *
 எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் * வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் **
 அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் * அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும் *
 தொழுகையும் இவை கண்ட அசோதை * தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே (8)

Pasuram 70 · corpus 716

Pasuram 70

Study resources at Uveda
குன்றினால் குடை கவித்ததும் * கோலக் குரவை கோத்ததுவும் குடமாட்டும் *
 கன்றினால் விளவு எறிந்ததும் * காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா **
 வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் * அங்கு என் உள்ளம் உள்குளிர *
 ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் * காணுமாறு இனி உண்டெனில் அருளே (9)

Pasuram 71 · corpus 717

Pasuram 71

Study resources at Uveda
வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி * வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க *
 நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ * சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் **
 கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய் * கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து *
 தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் * தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே (10)

Pasuram 72 · corpus 718

Pasuram 72

Study resources at Uveda
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை * வான் செலுத்தி வந்து ஈங்கணை மாயத்து *
 எல்லையில் பிள்ளை செய்வன காணாத் * தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் **
 கொல்லி காவலன் மால் அடி முடிமேல் * கோலமாம் குலசேகரன் சொன்ன *
 நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் * நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.