Pasuram 81 · corpus 3973
Pasuram 81
சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு ** அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச * இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு * இல்லை மாறு தெரிவுறிலே (81)
Thiruvarangathu Amudanar · Reading part · pasurams 81–90
Corpus pasurams 3973–3982
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 81 · corpus 3973
சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு ** அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச * இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு * இல்லை மாறு தெரிவுறிலே (81)
Pasuram 82 · corpus 3974
தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது * வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ** ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ *
தெரிவு உற்ற கீர்த்தி * இராமாநுசன் என்னும் சீர் முகிலே? 82
Pasuram 83 · corpus 3975
சீர் கொண்டு பேர் அறம் செய்து * நல் வீடு செறிதும் என்னும் *
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் ** உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் * உன்னுடைய
கார் கொண்ட வண்மை * இராமாநுச இது கண்டு கொள்ளே (83)
Pasuram 84 · corpus 3976
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை * காண்டலுமே
தொண்டுகொண்டேன் * அவன் தொண்டர் பொன் தாளில் ** என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை * வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் * இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே (84)
Pasuram 85 · corpus 3977
ஓதிய வேதத்தின் உட்பொருளாய் * அதன் உச்சி மிக்க
சோதியை * நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் **
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர் *
பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு * யாதொன்றும் பற்று இல்லையே (85)
Pasuram 86 · corpus 3978
பற்றா மனிசரைப் பற்றி * அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ** ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனைக் * கருதும் உள்ளம்
பெற்றார் எவர் * அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே (86)
Pasuram 87 · corpus 3979
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் * தன் குணங்கட்கு
உரியசொல் என்றும் * உடையவன் என்று என்று ** உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் * மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் * பொருந்தாதவரை பொரும் கலியே (87)
Pasuram 88 · corpus 3980
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து ** அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் *
புலி மிக்கது என்று * இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே (88)
Pasuram 89 · corpus 3981
போற்று அரும் சீலத்து இராமாநுச * நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் ** உன் சீர் தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் * என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது * இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே (89)
Pasuram 90 · corpus 3982
நினையார் பிறவியை நீக்கும் பிரானை * இந் நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை ** இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் * பூந்தொடையல்
வனையார் * பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே (90)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.