Corpus pasurams 3913–3922

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 3913

Pasuram 21

Study resources at Uveda
நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்
 துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் ** இனி தூய் நெறி சேர்
 எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம் *
 கதி பெற்றுடைய * இராமாநுசன் என்னைக் காத்தனனே (21)

Pasuram 22 · corpus 3914

Pasuram 22

Study resources at Uveda
கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்
 மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு ** மூவுலகும்
 பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த *
 தீர்த்தனை ஏத்தும் * இராமாநுசன் என் தன் சேம வைப்பே (22)

Pasuram 23 · corpus 3915

Pasuram 23

Study resources at Uveda
வைப்பு ஆய வான் பொருள் என்று * நல் அன்பர் மனத்தகத்தே
 எப்போதும் வைக்கும் இராமாநுசனை ** இரு நிலத்தில்
 ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து *
 முப்போதும் வாழ்த்துவன் * என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே? (23)

Pasuram 24 · corpus 3916

Pasuram 24

Study resources at Uveda
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து * அதனால்
 எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் ** இன்று கண்டு உயர்ந்தேன்
 பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக் *
 கைத்த மெய்ஞ்ஞானத்து * இராமாநுசன் என்னும் கார் தன்னையே (24)

Pasuram 25 · corpus 3917

Pasuram 25

Study resources at Uveda
கார் ஏய் கருணை இராமாநுச * இக் கடலிடத்தில்
 ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? ** அல்லலுக்கு
 நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் * உன்
 சீரே உயிர்க்கு உயிராய் * அடியேற்கு இன்று தித்திக்குமே (25)

Pasuram 26 · corpus 3918

Pasuram 26

Study resources at Uveda
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை * என் செய் வினை ஆம்
 மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை ** மேவும் நல்லோர்
 எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் *
 அக் குற்றம் அப் பிறப்பு * அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே (26)

Pasuram 27 · corpus 3919

Pasuram 27

Study resources at Uveda
கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்து விட்டு ஓங்கிய உன்
 வள்ளல் தனத்தினால் * வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் **
 வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று *
 தள்ளுற்று இரங்கும் * இராமாநுச என் தனி நெஞ்சமே (27)

Pasuram 28 · corpus 3920

Pasuram 28

Study resources at Uveda
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் * நங்கள்
 பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் ** பாதம் நண்ணா
 வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் *
 கொஞ்சிப் பரவகில்லாது * என்ன வாழ்வு இன்று கூடியதே (28)

Pasuram 29 · corpus 3921

Pasuram 29

Study resources at Uveda
கூட்டும் விதி என்று கூடுங்கொலோ * தென் குருகைப்பிரான்
 பாட்டு என்னும் * வேதப் பசுந்தமிழ் தன்னை ** தன் பத்தி என்னும்
 வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் *
 ஈட்டங்கள் தன்னை * என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே? (29)

Pasuram 30 · corpus 3922

Pasuram 30

Study resources at Uveda
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? * எண் இறந்த
 துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? ** தொல் உலகில்
 மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த *
 அன்பன் அனகன் * இராமாநுசன் என்னை ஆண்டனனே (30)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.